ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை ஆயுதமேந்திய தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, டெல்லி விமான நிலையத்திற்கு வந்த இரண்டு மணி நேரத்தில், ரண்கினா கார்கர் என்ற ஆப்கான் பெண் எம்.பி. ஒருவர் நாட்டிலிருந்து திரும்ப அனுப்பப்பட்டதாக கூறப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பின்னர் பல முன்னாள் அரசு அதிகாரிகள் காணாமல் போயுள்ளதாக அந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை தெரிவித்துதனர்.
தலிபான்கள் பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துவது முதல், சமையல் சரியில்லை என்றால் தீ வைப்பது முதல், தாலிபான் பெண்களை சித்திரவதை செய்யும் சம்பவங்கள் மனதை உருக்குவதாக உள்ளன.
ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்களது ஆட்சி, ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரையிலான முந்தைய தலிபானின் கொடுங்கோல் ஆட்சியை நினைவூட்டுகிறது. ஒட்டு மொத்த உலமும் ஆப்கானில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்ப்பாக கவலையுடன் கவனித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபானுக்கு பல பின்னடைவுகள் வரத் தொடங்கியுள்ளன. சர்வதேச நாணய நிதியம் (IMF) தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள வளங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.