18 Jul 2021 05:30 கோயம்புத்தூர்: தமிழகத்தில் மாநிலச் சீரமைப்பு செய்து, மேற்கு மண்டலத்தைப் புதிய மாநிலமாக (கொங்கு நாடு) உருவாக்க வேண்டும் என பாரதிய ஜனதா கோயம்புத்தூர் வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் ஜெகநாதன் தலைமையில், அன்னூரில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், ‘’மத்திய அரசு இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசியை, தமிழக அரசு சென்னை மண்டலத்துக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்தும், கோயம்புத்தூர் மாவட்டத்துக்குப் பாகுபாட்டுடன் குறைவாக ஒதுக்கியதற்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். மத்திய அரசு தமிழகத்தின் மேற்கு மண்டல மக்களின் சுய கௌரவத்தைப் பாதுகாக்கவும், வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், அங்கு வளர்ச்சியை ஏற்படுத்தவும் அரசியல் சட்டத்தைப் பயன்படுத்தி நிர்வாக ரீதியாக தமிழகத்தை மாநிலச் சீரமைப்பு செய்து, மேற்கு மண்டலத்தைப் புதிய மாநிலமாக (கொங்கு நாடு) உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அண்மைய காணொளிகள் 08:58 10:51 09:27 12:21