மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. இறந்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான குடும்ப ஓய்வூதியத்தில் பெரிய அளவிலான அதிகரிப்பு இருக்கும் என மோடி அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
மத்திய இணை அமைச்சர் சிங், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அதிகப்படியான மருத்துவ கண்காணிப்பும் நிதி உதவியும் தேவைப்படுகின்றன. இந்த முடிவால், இந்த குழந்தைகளின் சுமுகமான வாழ்க்கை மற்றும் சிறந்த பொருளாதார நிலை உறுதி செய்யப்படும் என்று கூறினார்.
பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் 8 லட்சம் ஊழியர்களின் அகவிலைப்படியை மத்திய அரசு அதிகரித்துள்ளது. அரசு பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களின் அகவிலைப்படியை 2.10 சதவீதம் அதிகரித்துள்ளது.