ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பாலம்மாள் என்ற பாட்டிக்கு இரு மகன்கள் நான்கு மகள்கள் உள்ளனர். கணவர் சங்கரன், 25 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார்.கனக சபாபதி என்ற தனது இரண்டாவது புதல்வர் வீட்டில் வாழ்ந்துவரும் பாட்டிக்கு மகன்கள் வழி, மகள்கள் வழி என பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள், எள்ளுப்பேரன்கள் என 100 பேர் குடும்பத்தில் உள்ளனர்.