comparemela.com


மறக்க முடியுமா? - சிட்டிசன்
16 ஜன, 2021 - 18:32 IST
0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
படம் : சிட்டிசன்
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : அஜித், வசுந்தரா தாஸ், மீனா, நக்மா
இயக்கம் : சரவண சுப்பையா
தயாரிப்பு : நிக் ஆர்ட்ஸ்
இன்று, காணாமல் போன அத்திப்பட்டி கிராமம் குறித்து பார்க்கலாம்... அதாவது சிட்டிசன்! இப்படத்தில் அஜித், ஒன்பது வேடங்களில் தோன்றியது, அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. கலெக்டர், நீதிபதி, காவல் துறை அதிகாரி ஆகியோரை, பல்வேறு வேடங்களில் சென்று, அஜித் கடத்துகிறார். ஏன் அவர்களை கடத்தினார் என்ற கேள்விக்கு, அத்திப்பட்டி என்ற அவரது கிராமமே அழிக்கப்பட்டது தான் காரணம் என்பது தெரிய வருகிறது. கடத்திய மூவரையும், அஜித் என்ன செய்தார்? அவர், இந்திய அரசிடம் முன்வைக்கும் கோரிக்கை என்ன என்பதே, படத்தின் கிளைமேக்ஸ்.
அத்திப்பட்டி கிராமம் அழிக்கப்படும் காட்சி, எந்த ஹாலிவுட் படம் என, தாடையை தடவி, யோசிக்க செய்தது. அஜித், மிக நம்பிக்கையோடு நடித்த படம் இது. இப்படத்தில் ஹீரோவிற்கு அடுத்த இடத்தை பிடித்தவர், சி.பி.ஐ., அதிகாரி சரோஜினி ஹரிச்சந்திரனாக வரும், நக்மா தான்.
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அனுராதாவின் குரல், அவ்வளவு கம்பீரமாக, நக்மாவிற்கு பொருந்தியிருந்தது. மீனா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தவர், சேது படத்தில் நடித்த அபிதா. அதேபோல, வசுந்தரா தாஸ் நடித்த பாத்திரத்தில் முதலில், சமீரா ரெட்டியே தேர்வு செய்யப்பட்டார். ஜெமினி கணேசனும் இப்படத்தில் ஆரம்பத்தில் நடிப்பதாக இருந்தது; ஆனால், அதில் பாண்டியன் நடித்தார்.
பாலகுமாரனின் வசனமும், ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்தன. அத்திப்பட்டி எனும் தீவை, சென்னையின் புறநகரில் அமைத்து, படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தேவாவின் இசையில், 'மேற்கே உதிக்கும் சூரியனே, பூக்காரா பூக்காரா, சிக்கிமுக்கி கல்லு, ஐ லைக் யூ...' பாடல்கள், பெரும் வெற்றி பெற்றன.
சிட்டிசன் சொல்வதை சட்டமாக்கலாம்!
Advertisement
கருத்துகள் (0)
கருத்தைப் பதிவு செய்ய

Related Keywords

,Citizen ,Ajith Kumar ,Meena ,Nagma ,Vasundhra ,Saravanasubbiah ,Tamil Cinema News ,Tamil Cinema ,Tamil Movies ,Tamil Film ,Kollywood ,Tamil News ,Tamil Actors Gallery ,Tamil Actress Gallery ,Tamil Actor Wallpapers ,Tamil Actress Wallpapers ,Tamil Movie News ,Tamil Movie Reviews ,Cinema Video Clips ,Tamil Cinema Latest News ,Kollywood Latest News ,Tamil Movie Latest News ,குடிமகன் ,அஜீத் குமார் ,மீனா ,நக்மா ,வாசுன்திற ,தமிழ் சினிமா செய்தி ,தமிழ் சினிமா ,தமிழ் திரைப்படங்கள் ,தமிழ் படம் ,தமிழ் செய்தி ,தமிழ் நடிகர்கள் கேலரி ,தமிழ் நடிகை கேலரி ,தமிழ் நடிகர் வால்பேப்பர்கள் ,தமிழ் நடிகை வால்பேப்பர்கள் ,தமிழ் திரைப்படம் செய்தி ,தமிழ் திரைப்படம் மதிப்புரைகள் ,சினிமா காணொளி கிளிப்புகள் ,தமிழ் சினிமா சமீபத்தியது செய்தி ,தமிழ் திரைப்படம் சமீபத்தியது செய்தி ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.