சீனக் கம்&#x

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா... யெச்சூரி, டி.ராஜா வாழ்த்தியது நியாயமா? why did indian communists greeted china communist party for its Centennial Celebration


04 Jul 2021 8 AM
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா... யெச்சூரி, டி.ராஜா வாழ்த்தியது தவறா?
மோடியும் ஷி ஜின்பிங்கும்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. எல்லை மோதல்கள் விவகாரத்தால் பா.ஜ.க-வும் காங்கிரஸ் கட்சியும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. சி.பி.ஐ., சி.பி.எம் தலைவர்கள் மட்டும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பினர்.
விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...!
எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…!Get Our Newsletter
மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சுமூகமான உறவு நிலவியது. பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றுவந்தார். அங்கு நடைபெற்ற உச்சிமாநாட்டில் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்றனர். அதையடுத்து, 2019-ம் ஆண்டு ஷி ஜின்பிங் மகாபலிபுரம் வந்துசென்றார். அதன் பிறகு, இந்திய - சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அது, இந்திய - சீன உறவில் விரிசலை ஏற்படுத்தியது. 'டிக்டாக்' செயலிக்குத் தடை உள்பட சீனாவுக்கு எதிரான சில நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.
மோடியும் ஷி ஜின்பிங்கும்
இத்தகைய சூழலில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிகழ்ச்சி ஜூலை 1-ம் தேதி சீனாவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் சீன அதிபருமான ஷி ஜின்பிங் உரையாற்றினார். அப்போது, “தேசிய இறையாண்மையையும் நிலத்தையும் பாதுகாக்க சீன மக்கள் கொண்டுள்ள உறுதியையும் அசாத்திய திறனையும் யாரும் குறைவாக மதிப்பிடக்கூடாது. எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் எங்களை ஒடுக்கவோ, அடக்கவோ சீன மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அப்படி யாராவது ஒடுக்கவோ அடக்கவோ முயன்றால் சீனப் பெருஞ்சுவற்றில் அவர்களை அடித்துநொறுக்குவோம்” என்றார் ஷி ஜின்பிங்.
உற்சாகத்துடன் நடைபெற்ற அந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் கட்சி உறுப்பினர்கள், பள்ளிக் குழந்தைகள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவுக்கு இந்தியாவின் முக்கியக் கட்சிகளான பா.ஜ.க-வோ, காங்கிரஸ் கட்சியோ வாழ்த்துச் செய்தி அனுப்பவில்லை. கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவங்களால் அரசியல் ரீதியாக இரு நாடுகளிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் அதற்கு காரணம். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு பா.ஜ.க வாழ்த்துச் செய்தி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
கல்வான் பள்ளத்தாக்கு
பா.ஜ.க-வும் காங்கிரஸ் கட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவுக்கு வாழ்த்துச்செய்திகளை அனுப்பாத நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வாழ்த்துச்செய்திகளை அனுப்பியுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, அண்டை நாடுகளான இந்தியாவும் சீனாவும் ஆசியாவின் இரண்டு பழைய நாகரிகங்கள் என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இரு நாடுகளும் அமைதியான உறவைப் பேணிய வரலாற்றை கொண்டுள்ளன என்றும் குறிப்பட்டுள்ளனர். எல்லைப் பிரச்னைகைளைக் குறிப்பிட்ட அவர், அமைதியான முறையில் இரு நாடுகளும் இந்தப் பிரச்னையைப் பேசித்தீர்க்க வேண்டும்” என்றார்.
பா.ஜ.க-வும், காங்கிரஸ் கட்சியும் வாழ்த்து தெரிவிக்காத நிலையில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வாழ்த்துச்செய்தி அனுப்பியது சரியா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம்.
“சீனாவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசமாகப் பார்க்கிறோம். இரு நாடுகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இந்தியாவைப் போலவே அதுவும் உலகில் அதிமான மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு. நம்மைவிட 10 கோடி பேர் அங்கு அதிகம். இரு நாடுகளும் இரண்டு ஆண்டுகால இடைவெளியில், விடுதலை பெற்றன. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து இந்தியா 1947-ம் ஆண்டு விடுதலை பெற்றது. சீனாவைப் பொறுத்தளவில், 1949-ம் ஆண்டிலிருந்து விடுதலை பெற்ற நாடுகளாக இயங்க ஆரம்பித்தன. ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து நாம் விடுதலை பெற்றோம் என்றால், சீனாவில் பழைய மன்னர் ஆட்சி முறையின் மிச்சசொச்சங்களாக பல பிரச்னைகளும் குழப்பங்களும் நீடித்தன. அவற்றை துடைத்தெறிந்து கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சீனா விடுதலை பெற்றது.
அருணன்
இரண்டு நாà�

Related Keywords

China , Taiwan , United States , India , United Kingdom , British , , Congress Party , M Cp Party , British India , States Run , China Old King , சீனா , டைவாந் , ஒன்றுபட்டது மாநிலங்களில் , இந்தியா , ஒன்றுபட்டது கிஂக்டம் , பிரிட்டிஷ் , காங்கிரஸ் கட்சி , பிரிட்டிஷ் இந்தியா , மாநிலங்களில் ஓடு ,

© 2025 Vimarsana