தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வரும் நிலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இதனால் ஊரடங்கில் (TN Lockdown) மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதைக்கிடையில் ஜூலை 16 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா குறைந்து வருவதால் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற 16 ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பள்ளிகள் (TN Schools) திறப்பது பற்றி முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஜூலை 16 ஆம் தேதி செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளனர். பள்ளிக்கல்வி செயலாளர் காகர்லா உஷா ஆலோசனையில் ஆணையர் நந்தகுமார், இயக்குனர்களும் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடுகள், மாணவர் சேர்க்கை, இலவச பாடப்புத்தகம், மடிகணினி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களை மீண்டும் சேர்ப்பது, சிறப்பு எழுத்தறிவு மற்றும் அங்கீகாரம் வழங்குதல் பற்றியும் ஆலோசனை நடைபெறுகிறது. முன்னதாக, தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், பள்ளிகளில் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வந்துகொண்டிருந்தனர். எனினும், தற்போது ஆசிரியர்கள் அனைவரும் தினமும் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளிகளுக்கு வந்து ஆன்லைன் முறையில் ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பினர். எனினும், பல ஆசிரியர்கள் இதற்கு தயாராக இல்லை. ஆசிரியர்கள் கட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ ஆசிரியர் சங்கத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இன்னும் கொரோனா தொற்று உள்ள நிலையில், ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இந்த அமைப்பு வலியுறுத்தி வருகின்றது. உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும். கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.