Rasipuram stones ready for Meenakshi Amman Temple  |&#x

Rasipuram stones ready for Meenakshi Amman Temple  |  மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தயார் நிலையில் ராசிபுரம் கற்கள்


Colors:
பதிவு செய்த நாள்
17
ஜூலை
2021
11:05
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து நடந்த வீரவசந்தராய மண்டப சீரமைப்பிற்காக ராசிபுரம் அருகே கற்கள் வெட்டிஎடுக்கப்பட்டு வருகின்றன.
இக்கோயிலில் 2018 பிப்.,2ல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இம்மண்டபம் முற்றிலும் சிதைந்தது. இதை சீரமைக்க கற்கள் வெட்டி எடுக்கும் பணிக்காக ரூ.6.40 கோடியும், மண்டபத்தை வடிவமைக்க ரூ.11.70 கோடியும் ஒதுக்கப்பட்டது.கற்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள களரம்பள்ளி மலையடிவாரப் பகுதியில் குவாரி அமைத்து வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. மண்டபத்தை சீரமைக்க 70 ஆயிரம் கன அடி கற்கள் தேவை. ஒரு லட்சம் கன அடி கற்கள் வெட்டி எடுக்க அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஜூலை 13,14ல் மதுரைக்கு கற்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டது.ஆனால் இயந்திரக்கோளாறால் கற்களை லாரியில் அடுக்கி வைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஓரிருநாளில் மதுரை கொண்டு வரப்பட்டு, கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான செங்குளம் பண்ணையில் கற்கள் செதுக்கப்படஉள்ளன.குறிப்பாக 4 பெரிய துாண்கள், 80 சிறிய துாண்கள், போதியல், சிம்மம், உத்திரம், சிம்ம பீடம், கபோதகம், கொடி வலை, நாடக சட்டம் போன்றவை உருவாக்கப்படுகின்றன. அடுத்தாண்டிற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Keywords

Namakkal , Tamil Nadu , India , , Meenakshi Amman , Madurai Meenakshi Amman , Namakkal District , Simha Faculty , Theater Law , நமக்கல் , தமிழ் நாடு , இந்தியா , மீனாட்சி அம்மன் , மதுரை மீனாட்சி அம்மன் , நமக்கல் மாவட்டம் ,

© 2025 Vimarsana