அரசியல் ப&#x

அரசியல் பிரவேசம்: ரஜினி மீண்டும் ஆலோசனை


By DIN  |  
Published on : 12th July 2021 09:54 AM  |   அ+அ அ-   |  
  |  
Share Via Email
அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா்களை, சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், இன்று சந்தித்து பேச உள்ளாா். அதற்கு முன்பாக சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளேன். மக்கள் மன்றத்தை தொடரலாமா? அதன் செயல்பாடுகள் என்ன என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளேன் என்றார். 
முன்னதாக தான் கட்சி தொடங்கி, அரசியலுக்கு வர முடியவில்லை என கடந்த ஆண்டு அறிக்கை மூலம் ரஜின வருத்தம் தெரிவித்திருந்தாா். ஆனால் தற்போது அவர் தான் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான இன்றைய சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது. 
சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகா் ரஜினிகாந்த், கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டாா். ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, சென்னையிலிருந்து, கடந்த 19-ஆம் தேதி அமெரிக்காவுக்குச் சென்றாா். அவருடன் குடும்பத்தினரும் சென்றனா். 
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மயோ மருத்துவமனையில் ரஜினிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. அங்கு தங்கி சிறிது நாள்கள் ஓய்வெடுத்த நிலையில், அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ரஜினி, வெள்ளிக்கிழமை சென்னை திரும்பினாா் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Keywords

United States , Chennai , Tamil Nadu , India , Madras , , Forum District , Madras Raghavendra , Special Single , Central Government , Rajini Medicare , Friday Madras , ஒன்றுபட்டது மாநிலங்களில் , சென்னை , தமிழ் நாடு , இந்தியா , மெட்ராஸ் , மன்றம் மாவட்டம் , மைய அரசு ,

© 2025 Vimarsana