Send தென்மேற்கு பருவமழை வட இந்தியாவில் பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை மையத்தின் முன்னறிவிப்பு பொய்த்துபோன நிலை உருவாகியுள்ளது. இந்திய வானிலை மையம் தென்மேற்கு பருவமழை வட இந்தியாவில் பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை மையத்தின் முன்னறிவிப்பு பொய்த்துபோன நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கேரளா, மும்பை, ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உ.பி. போன்ற மாநிலங்கள் தென்மேற்கு பருவமழை காரணமாக அதிக மழையை பெறும். தென்மேற்கு பருவழை மே மாதம் கடைசி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும். படிப்படியாக வட மாநிலங்களை அடைந்து தீவிரமடையும். ஆனால், இந்த முறை வட இந்தியாவில் பருவமழை தொடங்கக்கூடிய நாட்களை இந்திய வானிலை மையம் முன்னதாகவே அறிவித்திருந்தது. அதனடிப்படையில் பருவழை தொடங்கால் வானிலை மையத்தின் முன்னறிவிப்பை பொய்யாக்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை பெரும்பாலான மாநிலங்களவை எட்டியுள்ளது. ஆனால் இன்னும் வட இந்தியாவை எட்டவில்லை. டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்களின் சில பகுதிகள், மேற்கு ராஜஸ்தானை எட்டவில்லை. ஜூன் மாதத்திற்குள் இந்த மாநிலங்களில் தென்மேற்கு பருபமழை தொடங்கும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால் இன்னும் பெய்யவில்லை. ஜூன் மாதம் 13-ந்தேதி இந்திய வானிலை மையம் ஜூன் 15-ந்தேதி டெல்லியை தென்மேற்கு பருவமழை சென்றடையும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால் ஒருநாள் கழித்து பருவமழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்தது. பெரும்பாலான மாநிலங்களில் பருவமழை பலவீனம் அடைந்த பிறகு தொடங்கியது. ஜூன் 1-ந்தேதி இந்திய வானிலை மையம், ஜூன் 7-ந்தேதி பருவழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமான உள்ளன. வங்கக்கடலின் குறைந்த கீழ் மட்டத்தில் இருந்து வீசும் குளிர்ந்த காற்றால் ஜூலை 8-ந்தேதியில் இருந்து கிழக்கு இந்தியாவில் படிப்படியாக பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றது. ஜூலை 5-ந்தேதி பஞ்சாப், வடங்கு ஹரியானாவில் ஜூலை 10-ந்தேதி பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்தது. ஆனால், ஜூலை 10-ந்தேதி மழைக்கான அறிகுறியே இல்லை. மே மாதம் 30-ந்தேதி வரை தினசரி வானிலை அறிவிப்பில் கேரளா உள்பட தென் மாநிலங்களில் மே 31-ந்தேதி தென்மேற்கு பருவழை தொடங்கும் எனத் அறிவித்தது. ஆனால் 30-ந்தேதி மதியம், ஜூன் 3-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்தது. நாங்கள் வரையறுக்கப்பட்ட அனைத்து வழிமுறைகளையும் கொண்டு பருவழை குறித்து முன்னறிவிப்பை வெளியிடுகிறோம். தற்போது அளவுகோல்கள் முழுமையாக திருப்தி அடையவில்லை என வானிலை மைய டைரக்டர் ஜெனரல் தெரிவித்தார். பெரும்பாலான மாநிலங்களில் வானிலை மையம் அறிவித்த நாட்களில் பருவமழை தொடங்காமல் கணிப்புகள் பொய்யாகியுள்ளன.