உங்கள் தொ&#x

உங்கள் தொகுதியிலாவது விளையாட்டு குழுக்களை ஏற்படுத்தி மொபைல் போனிலிருந்து இளைஞர்களை திருப்புங்கள்...


Advertisement
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 3 கோடி ரூபாய் பரிசு போன்ற பல, இளைஞர் நலன் காக்கும் அறிவிப்புகளை செய்த முதல்வருக்கு நன்றி.- தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி'இப்படித் தான் இருக்க வேண்டும். உங்கள் தொகுதியிலாவது நிறைய விளையாட்டு குழுக்களை ஏற்படுத்தி, அரசியல், மொபைல் போனிலிருந்து இளைஞர்களை திருப்புங்கள்...' என,
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 3 கோடி ரூபாய் பரிசு போன்ற பல, இளைஞர் நலன் காக்கும் அறிவிப்புகளை செய்த முதல்வருக்கு நன்றி.
- தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி
'இப்படித் தான் இருக்க வேண்டும். உங்கள் தொகுதியிலாவது நிறைய விளையாட்டு குழுக்களை ஏற்படுத்தி, அரசியல், மொபைல் போனிலிருந்து இளைஞர்களை திருப்புங்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி அறிக்கை.
'ஒன்றியம் என்ற சொல்லைத் தான் பயன்படுத்துவோம்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அப்படியானால், மத்திய அரசு என்ற வார்த்தை உள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை அவரும், அவர் கட்சியினரும் இனி பயன்படுத்த மாட்டனரா?
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
'யாரை திருப்திபடுத்த அவ்வாறு அவர் சொன்னாரோ; இப்போது பெருகும் கண்டனங்களால் நிச்சயம் அவர் கவலை கொள்ளவே செய்வார்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சரின் 'டுவிட்டர்' கணக்கு ஒரு மணி நேரம் முடக்கப்பட்டது குறித்து, கூட்டு பார்லிமென்ட் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுபோல, டுவிட்டர் நிறுவனத்தில் மத்திய அரசு நடத்திய திடீர், 'ரெய்டு' குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.
- தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்
'எப்படி சார், தராசின் முள் போல இப்படி நியாயமாக பேசுகிறீர்கள்... இப்படியே, எல்லா விவகாரங்களுக்கும் குரல் கொடுத்தால் சரி தான்...' என, ஜாடை மாடையாக சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை.
பிரதமர் மோடிக்கு எதிராக செயல்படுகிறேன் என்பது தவறு. எப்போதுமே நான் தனிப்பட்ட விவகாரங்களை எழுப்புவதில்லை. கட்சியின் கொள்கைக்கு முரணான விஷயங்களை விவாதிக்க வேண்டிய கட்சி அமைப்புகள் இறக்கும் தருவாயில் உள்ளதால், அதை நான் எழுப்புகிறேன்.
- பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி
'பா.ஜ.,வின் பிற தலைவர்கள் பற்றி நீங்கள் விமர்சிப்பதில்லையே. மறந்து விட்டீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., எதிர்ப்பு கருத்துகளை கூறி வரும் அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை.
'ஜெய்ஹிந்த்' என்பது தவறான வார்த்தை அல்ல. காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள், சட்டசபையில் அவ்வாறு பேசிய எம்.எல்.ஏ., ஈஸ்வரனிடம் இருந்து விளக்கம் பெற வேண்டும்.
- தமிழக காங்., துணைத் தலைவர் ராமசுகந்தன்
'காங்., - எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமல்ல, காங்., தலைமை கூட ஈஸ்வரன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., துணைத் தலைவர் ராமசுகந்தன் அறிக்கை.
'யூனியன்' என்ற ஆங்கில வார்த்தைக்கு 'சங்கம்' என்ற தமிழ் அர்த்தம் உண்டு. அதனால் இனிமேல் மத்திய அரசை, 'சங்க அரசு' என்று அழைக்கலாமா?
- தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர்
'அந்த வார்த்தைக்கு, இன்னும் பல அர்த்தங்கள் உள்ளன. அதில் ஒன்றியம் என்ற வார்த்தை தான், தி.மு.க.,வுக்கு பிடித்துள்ளது. அதற்காக இப்படியா...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர் அறிக்கை.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்களà¯�

Related Keywords

India , Narayanan Tirupati , Twitter , Olympics Gold Medal , Youth Secretary Udhayanidhi , Youth Secretary Udhayanidhi Report , Central Government , Narayanan Tirupati Report , Twitter Accounting , Central State , இந்தியா , நாராயணன் திருப்பதி , ட்விட்டர் , ஒலிம்பிக்ஸ் தங்கம் பதக்கம் , மைய அரசு , மைய நிலை ,

© 2025 Vimarsana