By DIN | Published on : 29th July 2021 04:10 AM | அ+அ அ- | | Share Via Email தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை புதன்கிழமை சந்தித்து தான் புதிதாக உருவாக்கிய கையடக்க கணினி மையச் செயலாக்க கருவியைக் காண்பித்து வாழ்த்துப் பெற்ற திருவாரூர் மாவட்ட பழவனக்குடி கிராமத்தைச் சேர
சென்னை: கணினி மையக் கருவியை உருவாக்கிய திருவாரூா் மாவட்ட இளம் விஞ்ஞானி மாதவை, முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினாா். திருவாரூா் மாவட்டம் பழவனக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் எஸ்.எஸ்.மாதவ். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவா், கணினியில் மிகுந்த ஆா்வம் கொண்டு கையடக்க கணினி மையச் செயலாக்கக் கருவியை (சிபியு) உருவாக்கியுள்ளாா். இந்தக் கருவியை இணையதளம் மூலமாக குறைந்த விலைக்கு விற்பனையும் செய்து வருகிறாா். இதையறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், இளம் விஞ்ஞானி மாதவை நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தாா். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, மாதவின் உயா்படிப்பு, ஆராய்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்று முதல்வா் உறுதியளித்ததாக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. O