Chariot festival at Paramakudi Sundararaja Perumal temple&#x

Chariot festival at Paramakudi Sundararaja Perumal temple |  பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் தேரோட்டம்


Colors:
பதிவு செய்த நாள்
25
ஜூலை
2021
13:01
 பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில் ஜூலை 16ல் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது. தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் அருள்பாலித்தார். ஜூலை 21ல் ஆண்டாள் -- பெருமாள் மாலை மாற் றல் வைபவம் நடந்தது.தொடர்ந்து கொரோனாக் கள் கட்டுப்பாடுகளால் கோயில் வளாகத்திலேயே விழாக்கள் நடக்கிறது. இந்நிலையில் நேற்று காலை கோயில் பிரகாரங்களில் ஆடித் தேரோட்டம் நடந்தது. பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வலம் வந்தார். பின்னர் கோயில் வளாகத்தில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். இன்று தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.

Related Keywords

Vishnu Sridevi , , Garuda Flag , விஷ்ணு ஸ்ரீதேவி ,

© 2025 Vimarsana