Colors:
பதிவு செய்த நாள்
27
ஜூன்
2021
15:16
வேலுார்: சோளிங்கர், லட்சுமி நரசிம்மர் கோவில், மாதிரி ரோப்கார் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில், 108 வைஷ்ணவ தலங்களில் ஒன்றான, லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் உள்ள யோக நரசிம்மரை தரிசனம் செய்ய, 750 அடி உயரமுள்ள மலைக்கு, 1,305 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். நடக்க இயலாத முதியவர்கள் டோலி மூலம் சென்று வந்தனர்.