comparemela.com


Subscribe to our Editor's Exclusive daily handpicked articles, delivered into your inbox.Sign-up to our newsletter
திருச்சியைத் தலைமையிடமாகக்கொண்டு மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகம் செயல்பட்டுவருகிறது. தற்போதைய மத்திய மண்டல காவல்துறைத் தலைவராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றது முதல் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களுக்குப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். அதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்டம், மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணவாசி பகுதியில் வேலைவாய்ப்பு குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில், போதை விழிப்புணர்வு, போக்சோ, சைபர் க்ரைம் விழிப்புணர்வு, குழந்தை திருமணச் சட்டம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர், கரூர் மாவட்டத்தில் பள்ளியில் படிக்கும் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் இணையவழி குற்றச் செயல்களில் பாதிக்கப்படும்போது குற்றங்களிலிருந்து பள்ளி மாணவர்களையும், கல்லூரி மாணவர்களையும் பாதுகாக்கும் பொருட்டு, பள்ளி, கல்லூரிகளில் போலீஸ் சைபர் கிளப் அமைப்பு தொடக்கவிழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்வில் பாலகிருஷ்ணன்
இந்த நிகழ்ச்சியில், கரூர் வெள்ளியனை அமராவதி கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டுவரும் காலேஜ் லெவல் போலீஸ் சைபர் கிளப் அமைப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் மாணவர்களிடையே கலந்துரையாடலை மேற்கொண்டனர். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன்,
``குட்கா மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடை செய்ய நேரடியாக வணிகர்கள் சங்கங்கள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும், தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சீல் வைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படும். மத்திய மண்டலத்தில் இதுவரை அதிகபட்சமாக விற்பனை செய்யப்பட்டுவந்த குட்கா பொருள்கள் பெங்களூரிலிருந்து கொண்டுவரப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட முகவர்கள் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. சட்டவிரோதமான குட்கா விற்பனை தடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Related Keywords

Trichy ,Tamil Nadu ,India ,Bangalore ,Karnataka ,Karur Amravati ,G Balakrishnane Karur ,College Level ,Central Regional ,Current Central Regional ,Karur District ,Airport Bordered ,Festival District ,திருச்சி ,தமிழ் நாடு ,இந்தியா ,பெங்களூர் ,கர்நாடகா ,கல்லூரி நிலை ,மைய பிராந்திய ,கரூர் மாவட்டம் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.