சென்னை : பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் கச்சா எண்ணெயின் விலை (ஒரு பேரல்) ரூ.2,800ஆக இருந்தது. இது தற்போது பல மடங்கு உயர்ந்து ரூ.5,021ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகளும் பெட்ரோல்- டீசல் மீது வரியை விதிக்கின்றன. இந்த 2 காரணங்களாலும் பெட்ரோல்- டீசல் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து இருக்கிறது.