comparemela.com
Home
Live Updates
அதிபர் மன்றத்தில் சமய நல்லிணக்கத்தூதுவர் இமாம் சையது நியமனம் : comparemela.com
அதிபர் மன்றத்தில் சமய நல்லிணக்கத்தூதுவர் இமாம் சையது நியமனம்
16 Jul 2021 05:30
சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான அதிபர் மன்றத்தின் உறுப்பினராக சமய நல்லிணக்கத் தூதுவர் இமாம் சையது ஹசன் அல்-அத்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மன்றத்தில் மூன்றாண்டுகளுக்கு அங்கம் வகிப்பார். அத்துடன் மன்றத்தின் ஐந்து உறுப்பினர்கள் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மன்றத்தில் அங்கம் வகிக்க மறுநியமனம் பெற்றுள்ளனர்.
அவர்கள் திரு ஒத்மான் ஹரூன் யூசோஃப், பேராசிரியர் சான் ஹெங் சீ, திரு பேரி டெஸ்கர், திரு ஃபிலிப் ஜெயரத்னம் மற்றும் தவத்திரு சிக் குவாங் ஷெங். திரு ஜே.ஒய்.பிள்ளை, ஷேக் சையது இசா முகம்மது சிமெய்ட் ஆகியோர் பதவி விலகினர்.
இந்த மாற்றங்கள் நேற்று முதல் நடப்புக்கு வந்ததாக அதிபர் மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. மன்றத்தில் இப்போது 16 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றன. சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்த மன்றம் உருவாக்கப்பட்டது.
அதன் உறுப்பினர்கள் அதிபர் ஹலிமா யாக்கோப்பால் நியமிக்கப் பட்டனர். சிங்கப்பூரில் சமய நல்லிணக்கம் தொடர்பில் உள்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதுதான் சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன் றத்தின் முக்கிய பணி. புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திரு சையது ஹசன், லுவிஸ் ரோடில் உள்ள பா அல்வி பள்ளிவாசலில் 40 ஆண்டுகளுக்கு மேல் தலைமை வகித்து வருகிறார். வெவ்வேறு சமயம் சார்ந்த மக்களுக்கு இடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தவர். கலந்துரையாடல் மூலம் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் படுவதை வலுவாக ஆதரிப்பவர் இவர்.
அண்மைய காணொளிகள்
08:58
10:51
09:27
12:21
Related Keywords
Syed Hasan
,
Imam Syed Hasan
,
Imam Syed
,
Sheikh Syed
,
,
House Communion Imam Syed
,
Communion Imam Syed Hasan
,
House Report
,
New Mr Syed Hasan
,
சையத் ஹசன்
,
இமாம் சையத்
,
வீடு அறிக்கை
,
comparemela.com © 2020. All Rights Reserved.