9 Jul 2021 05:30
சென்னை: தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மக்கள் பயனடையும் வகையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற புதிய திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீரிழிவு, ரத்த அழுத்தம் உள் ளிட்ட நோய்க்குச் சிகிச்சை பெற்று வருபவர்களைக் கண்டறிந்து, அவர்களின் வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கும் பணியை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விருகம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், “மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் முதல்கட்டமாக நீரிழிவு, ரத்த அழுத்தம் பாதிப்புகளுடன் உள்ள 20 லட்சம் நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று மருந்து, மாத்திரைகளை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஊரடங்கு காலகட்டத்தில் நீரிழிவு, ரத்த அழுத்தம் பாதிப்பால் அவதிப்படுவோர் மருத்துவமனைக்குச் சென்று மருந்து, மாத்திரைகள் வாங்குவதில் சிரமத்தை எதிர்நோக்கி வரு கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, முதல்வரின் ஆலோசனைப்படி வீடுகளுக்குச் சென்று மருந்து, மாத்திரைகள் வழங்குவதற்கு முடிவெடுத்து உள்ளோம்.
“அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
அண்மைய காணொளிகள்
13:09