23 Jun 2021 05:30
சென்னை: அரசிற்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கிட ‘முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’வை அமைத்து மாநில அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டு உள்ள அரசாணையில், “கொவிட்-19 தாக்கம் காரணமாக தமிழகத்தின் பொருளாதாரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசின் வருவாய், நிதி பற்றாக்குறை, அதிகளவிலான கடன் சுமை ஆகியவை தொடர்ந்து ஆபத்தான நிலையை ஏற்படுத்தி வருகின்றன.
“அதேநேரத்தில் பொருளாதாரத் தில் தமிழக அரசு விரைந்து வளர்ச்சியை எட்டிவிடும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர்.
“இந்நிலையில், இப்பிரச்சினை களை எதிர்கொண்டு, மாநிலத்தில் வளர்ச்சியை அதிகரிக்க ‘முதல்வருக் கான பொருளாதார ஆலோசனைக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது.
“இக்குழுவில் உலகளவில் புகழ்பெற்ற ஐந்து பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.
“பொருளாதாரம், சமூக நீதி, மனித மேம்பாடு தொடர்பான பிரச்சினைகள், பெண்களுக்குச் சம வாய்ப்புகளை உறுதி செய்வது உள்ளிட்ட விஷயங்களில் பொதுவான வழிகாட்டுதல்களை இந்தக் குழு வழங்கும்.
“மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, உற்பத்தித் திறனை அதிகரிப்பது குறித்த யோசனைகளையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதிநிலையை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் இக்குழு வழங்கும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்,
நோபல் பரிசு வென்ற பொரு ளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ,
முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ஜீன் ட்ரெஸ்,
முன்னாள் மத்திய நிதித் துறை செயலாளர் எஸ். நாராயண் ஆகியோர்.
படம்: ஊடகம்
13:09