comparemela.com


Send
டெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி
டெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். படத்திறப்பு விழாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிலும் ஜனாதிபதி பங்கேற்கிறார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். விழாவுக்கான ஏற்பாடு சட்டப் பேரவைச் செயலகத்தினால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார். 
முன்னதாக டெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க குடியரசுத்தலைவருக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Keywords

New Delhi ,Delhi ,India ,Madras ,Tamil Nadu ,Ramnath Govind ,Stalin Hc Legislative Assembly ,Hc Assembly ,Article Assembly Secretariat ,Hc Legislative Assembly ,Assembly August ,President Ramnath Govind ,Legislative Assembly August ,புதியது டெல்ஹி ,டெல்ஹி ,இந்தியா ,மெட்ராஸ் ,தமிழ் நாடு ,ராம்நாத் கோவிந்த் ,சட்டசபை ஆகஸ்ட் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.