Send
இந்தியாவில் வரும் 2030-ம் ஆண்டுக்குள் சாலை விபத்துகள் இல்லாத சூழலை உருவாக்குவதே இறுதி இலக்கு என மத்திய மந்திரி கட்காரி தெரிவித்துள்ளார்.
நிதின் கட்காரி
இந்தியாவில் வரும் 2030-ம் ஆண்டுக்குள் சாலை விபத்துகள் இல்லாத சூழலை உருவாக்குவதே இறுதி இலக்கு என மத்திய மந்திரி கட்காரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த காணொலி கருத்தரங்கில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் சாலை விபத்துகளையும், சாலை மரணங்களையும் 50 சதவீதம் குறைத்து இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளது.
வரும் 2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையையும், மரணத்தையும் பாதியாக குறைக்க இலக்கு வைத்துள்ளோம்.
கடந்த ஆண்டு சுவீடனில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பங்கேற்றோம். அப்போது, வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை விபத்துகள் இல்லாத சூழலை உருவாக்குவோம் என உறுதியளித்துள்ளோம்.
விரைவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை, மரணத்தை 50 சதவீதம் குறைத்து விடுவோம். அதனை நிறைவேற்றுவோம். நாங்கள் வகுத்த இந்த இலக்கை இன்று வெற்றிகரமாக தமிழகம் மட்டும் ஏற்கனவே அடைந்து விட்டது.
அந்த மாநிலத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 53% குறைந்துள்ளது. அதற்காக எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.