comparemela.com


24 Jul 2021 10 AM
பாரதமாதா குறித்து சர்ச்சைப் பேச்சு; 7 பிரிவுகளில் வழக்கு! - பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது
கைதுசெய்யப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா
மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாகக் கூடுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கிறிஸ்தவ இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மைச் சமூகத்தின் உரிமை மீட்புப் போராட்டம் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரும், பனவிளை சர்ச் பங்குதந்தையுமான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைப் பேசினார். அதில், `தி.மு.க ஆட்சிக்கு வந்தது நாங்கள் போட்ட பிச்சை. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் சட்டை போடாமல் சுசீந்திரம் கோயிலுக்குப் போகிறார்கள். நாங்கள் சர்ச்சுக்கு கோட் போட்டுக்கொண்டு, டை அணிந்துகொண்டு போவோம். என்னதான் நீங்கள் கோயிலுக்குப் போனாலும் இந்துக்கள் உங்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்.
போராட்டத்தில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா
எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ காலில் செருப்பு போடாமல் நடக்கிறார். பாரத மாதாவை அவர் செருப்பு போட்டு மிதிக்க மாட்டாராம். ஆனால் பாரதமாதாவின் அசிங்கம் நம் மீது பட்டு, சொறி சிரங்கு ஏற்படாமலிருக்க நாம் ஷூ போட்டுக்கொண்டு நடக்கிறோம். பாரதமாதா ரொம்ப டேஞ்சர். மண்டைக்காட்டில் நடந்த மதக் கலவரத்துக்கு எம்.ஆர்.காந்திதான் காரணம்’ என[ பேசியதுடன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் தரக்குறைவாக விமர்சித்திருக்கிறார்.
உங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா!
Subscribe to our Editor's Exclusive daily handpicked articles, delivered into your inbox.Sign-up to our newsletter
அந்த வீடியோ வைரலாகப் பரவியதால், தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வீடியோ வெளியிட்டார். இது குறித்து இந்து அமைப்பினர் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். அதன்பேரில் அருமனை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அருமனை வட்டார கிறிஸ்துமஸ் விழா தலைவர் ஸ்டீபன், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஆகியோர் மீது மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல் விடுத்தல், சட்டவிரோதமாகக் கூடுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அருமனை போராட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா
இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானார். அவர் பங்குத்தந்தையாக இருக்கும் பனவிளையில் நேற்று போலீஸார் தேடிச்சென்றனர். அவர் அங்கு இல்லை. இதையடுத்து மதுரை மாவட்டம், கள்ளிக்குடியில் தலைமறைவாக இருந்த பாதிரியார் ஜார்ஜ், போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை கன்னியாகுமரி மாவட்டம், அருமனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.
Also Read

Related Keywords

Suchindram ,Tamil Nadu ,India ,Kanya Kumari ,Arumanai Christian ,George Ponnaiyah ,Democratic Christian The Convention ,Church Code ,B Office ,Kanyakumari District ,Arumanai Christian Islamic Systems ,Democratic Christian ,Communion Endowment Secretary ,சூசின்திறாம் ,தமிழ் நாடு ,இந்தியா ,கன்யா குமாரி ,கணியகுமாரி மாவட்டம் ,ஜனநாயக கிறிஸ்துவர் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.