comparemela.com


புது டெல்லி: 2020ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு விதிப்பு போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அரசு தரப்பிலிருந்து சிறப்பு பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. 
அதன்படி மத்திய அரசின் பொருளாதாரச் சலுகையாக பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKY) திட்டம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் சலுகை வழங்கப்பட்டது. 
இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸின் (Corona Second Wave) இரண்டாவது அலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு மீண்டும் ஏழை குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) 2021 இல் அறிவித்தது. மே மாதங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புகள் நீடிப்பதால் நவம்பர் மாதம் வரையிலும் கரீப் கல்யாண் திட்டத்தை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்குக் கூடுதலான அளவில் உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. எனவே கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 15.30 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் போதிய அளவில் உணவு தானியங்கள் இருப்பதை உறுதி செய்ய இந்திய உணவுக் கழகம் தேவையான அளவு இருப்பு வைத்துள்ளது. கரீப் கல்யாண் 3வது திட்டத்தின் கீழ் 2021 மே - ஜூன் மாதங்களில் 78.26 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Related Keywords

Hindustan ,India General ,India ,Kalyan ,Maharashtra ,New Delhi ,Delhi ,Tamil Nadu ,Anna Yojana ,Food Corporation Of India ,Twitter ,Facebook ,Statese Union ,Central Government ,Pradhan Secretary Caribbean ,Kalyan Anna Yojana ,Pradhan Secretary Kalyan Yojana ,Kalyan Yojana ,Food Corporation ,May June ,ஹிந்துஸ்தான் ,இந்தியா ,கல்யாண் ,மகாராஷ்டிரா ,புதியது டெல்ஹி ,டெல்ஹி ,தமிழ் நாடு ,அண்ணா யோஜனா ,உணவு நிறுவனம் ஆஃப் இந்தியா ,ட்விட்டர் ,முகநூல் ,மைய அரசு ,கல்யாண் அண்ணா யோஜனா ,கல்யாண் யோஜனா ,உணவு நிறுவனம் ,இருக்கலாம் ஜூன் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.