comparemela.com


புதுடில்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மற்றொரு மைல்கல்லை அடைந்தார். அவரது ட்விட்டர் கணக்கில் அவரை பின்தொடரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை நேற்று 70 மில்லியனைத் தாண்டியது. இதன் மூலம், சமூக ஊடகத் தளமான ட்விட்டரில் தற்போது பதவியில் உள்ள அரசியல்வாதிகளில் அதிகம் பின்பற்றப்படும் அரசியல்வாதி ஆகியுள்ளார் பிரதமர் மோடி.
குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் 2009 ல் பிரதமர் மோடி ட்விட்டரைப் பயன்படுத்தத் தொடங்கினார். 2010 இல், அவருக்கு ஒரு லட்சம் ஃபாலோயர்கள் இருந்தனர்.
பிரதமர் மோடிக்குப் (PM Modi) பிறகு, அதிக ஃபாலோயர்களைக் கொண்டுள்ள ட்விட்டர் கணக்குகளில் போப் பிரான்சிஸின் ட்விட்டர் பக்கம் 53 மில்லியனுக்கும் அதிகமானஃபாலோயர்களைக் கொண்டுள்ளது.
ஜூலை 2020 இல், பிரதமரின் ட்விட்டர் ஃபாலோயர்கள் 60 மில்லியனைத் தாண்டினர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 30.9 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (Joe Biden) ட்விட்டரில் 30.9 மில்லியன் ஃபாலோயர்களும், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு ட்விட்டரில் 129.8 மில்லியன்ஃபாலோயர்களும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு 7.1 மில்லியன் ட்விட்டர் ஃபாலோயர்களும் உள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ட்விட்டரில் 26.3 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 19.4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.
முன்னதாக, டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் மிக அதிக ஃபாலோயர்களைக் கொண்ட அரசியல்வாதியாக இருந்தார். ஆனால் அமெரிக்க கேபிட்டலில் நடந்த கலவரங்கள் காரணமாக அவரது கணக்கு நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. ட்விட்டர் அவரது கணக்கை நிறுத்துவதற்கு முன்னர் முன்னாள் அமெரிக்க அதிபருக்கு 88.7 மில்லியன் ஃபாலோயர்கள் இருந்தனர்.
இந்தியப் பிரதமர் ட்விட்டரில் (Twitter) மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் நாட்டின் வளர்ச்சியைப் பற்றிய தனது கருத்துக்களை ஒளிபரப்பவும், புதிய சாதனைகளை முன்னிலைப்படுத்தவும், தனது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்களை பரப்பவும் மைக்ரோ பிளாக்கிங் சமூக ஊடக தளத்தை அவர் தவறாமல் பயன்படுத்துகிறார்.
இந்திய அரசு துறைகள் மற்றும் அமைச்சர்கள் நமது இந்திய உருவாக்கமான கூவை (Koo App) ஊக்குவிக்கின்றனர்.
ராய்ட்டர்ஸின் அறிக்கையின்படி, ட்விட்டர் இன்க், இந்திய உருவாக்கமான கூவிடம் (Koo App) பல தளங்களில் தோற்று வருகிறது. பல இந்திய அரசாங்க துறைகள் மற்றும் அமைச்சர்கள் கூ செயலியை ஊக்குவித்து வருவதால், அவர்களுக்கு பிடித்தமான சமூக ஊடகத்  தளமாக கூ மாறி வருகிறது.
"மிகச் சிறந்த உதாரணம் இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணாவாகும். இந்த மாதம் பதவியேற்ற அவர், ஒரு புதிய கூ கணக்கை உருவாக்கி, விரைவில் சமூக ஊடக நிறுவனங்களின் மறுஆய்வு நடக்கும் என்று அறிவித்தார்.” என்று ராய்ட்டர்ஸ் கூறியது.
பிரதமர் மோடி இன்னும் கூ செயலியில் சேரவில்லை. ஆனால் பல அரசாங்க அமைச்சர்கள் மற்றும் துறைகள் இரு தளங்களையும் தொடர்ந்து பயன்படுத்துகின்றன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Related Keywords

Hindustan ,India General ,India ,Prague ,Praha ,Hlavníesto ,Czech Republic ,France ,New Delhi ,Delhi ,Rahul Gandhi ,Twitter ,Facebook ,Reuters ,France Chancellor Immanuel ,Secretary Amit ,Her Accounting ,Twitter Her ,Prime Minister ,India New ,Technical Secretary Ashwini ,New Goo ,ஹிந்துஸ்தான் ,இந்தியா ,ப்ராக் ,பிரதா ,செக் குடியரசு ,பிரான்ஸ் ,புதியது டெல்ஹி ,டெல்ஹி ,ராகுல் காந்தி ,ட்விட்டர் ,முகநூல் ,ராய்ட்டர்ஸ் ,செயலாளர் அமித் ,ட்விட்டர் அவள் ,ப்ரைம் அமைச்சர் ,இந்தியா புதியது ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.