comparemela.com


PM Kisan Samman Nidhi: பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் மோடி அரசால் தொடங்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டமாகும். இந்த திட்டத்தின் நோக்கம் நாட்டின் சிறு விவசாயிகளின் விவசாயத்திற்கு நிதி உதவி வழங்குவதாகும். பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய், அதாவது ஒரு வருடத்தில் 3 தவணைகளில் மொத்தம் 6000 ரூபாய்க்கான உதவியை அரசு அளிக்கின்றது. 
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் (PM KIsan Yojana) பயனை பெற யாருக்கு தகுதி உண்டு? யாருக்கு இல்லை? எந்த சூழ்நிலையில் திட்டத்தின் நன்மை கிடைக்கும்? எந்த சூழலில் உதவி கிடைக்காது? இந்த அனைத்து கேள்விகளுக்கான பதில்களும் pmkisan.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பதிவு செய்வதற்கு முன்னர் இந்த திட்டத்தின் சில முக்கிய தவல்களை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். 
ஒற்றை நிலத்தில் 1 க்கும் மேற்பட்டோருக்கு நன்மை
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, ஒரே நிலத்தில் பல உழவர் குடும்பங்களின் பெயர்கள் இருந்தால், தகுதிவாய்ந்த அனைத்து விவசாய குடும்பங்களும் இந்த திட்டத்தின் வழிகாட்டுதலின் கீழ் தனி தவணையின் பலனைப் பெறுவார்கள். இருப்பினும், மொத்த ஆண்டு தவணை (Yearly Installment) வரம்பு ரூ .6000 ஆக இருக்கும்.
இந்த திட்டத்தில் குடும்பத்தின் பொருள் என்ன
பிரதமர் கிசான் யோஜனாவின் கீழ், உழவர் குடும்பம் என்றால் இங்கே கணவன், மனைவி மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகியோர் இதில் அடங்குவர். அவர்கள் எந்த நிலத்தில் பயிரிடுகிறார்கள் என்பதை குறிப்பிட்டு நிலப் பதிவில் அவர்களின் பெயர் இருக்க வேண்டியது அவசியம்.
நிலம் தந்தையின் பெயரில் இருந்தால் என்ன நடக்கும்
ஒரு விவசாயி தனது பெயரில் இல்லாமல் தனது தந்தையின் பெயரில் ஒரு வயலில் பணி செய்தால், அவருக்கு பிரதமர் கிசான் யோஜனாவின் நன்மை கிடைக்காது. அவர் தனது பெயரில் அந்த வயலை பதிவு செய்துகொள்ள வேண்டும். 
ஓய்வூதியம் பெறும் நிலையில்
ரூ .10,000 க்கு மேல் மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு இந்த நன்மை கிடைக்காது.
மற்றவர்களின் வயலில் கூலிக்கு வேலை செய்வது 
ஒரு விவசாயி (Farmers) வாடகைக்கோ அல்லது பாதி விளைச்சலைக் கொடுப்பதான உறுதியுடனோ மற்றொருவரின் வயலில் வேலை செய்தால், இந்த திட்டத்தின் பலன் அவருக்கு கிடைக்காது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Related Keywords

Hindustan ,India General ,India , ,Twitter ,Facebook ,Secretary Finance ,Land Father ,Pm Kisan Scheme ,Pm Kisan Scheme Latest News ,M Kisan Main Facts ,M Kisan Scheme Breaking ,Ho Can Get Pm Kisan Benefit ,Ho Cannot Get Pm Kisan Benefit ,Mksy Latest News ,ஹிந்துஸ்தான் ,இந்தியா ஜநரல் ,இந்தியா ,ட்விட்டர் ,முகநூல் ,செயலாளர் நிதி ,பீயெம் கீசன் திட்டம் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.