comparemela.com


Colors:
பதிவு செய்த நாள்
30
ஜூலை
2021
11:56
செஞ்சி : மேலச்சேரி பச்சையம்மன் கோவிலில் கொரோனா பரவலைத் தடுக்க ஆடி மாதம் முழுதும் கோவில் மூடப்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
செஞ்சி அடுத்த மேலச்சேரியில் காட்டுப்பகுதியில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் கோவில் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த ஏராளமானோர் அம்மனை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.ஆடி மாதத்தில் சாதாரண நாட்களிலும், வெள்ளிக் கிழமையிலும் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்த வருவர்.
கொரோனா பரவலைத் தடுக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் கோவில்களில் பொங்கல் வைக்கவும், ஆடு, கோழி பலியிடவும், மொட்டையடிக்கவும் தடை விதித்துள்ளது.பக்தர்கள் முகக் கவசம் அணித்து. சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலச்சேரி பச்சையம்மன் கோவிலுக்கு பக்தர்கள் கட்டுக்கடங்கமல் வருகின்றனர். கொரோன விதிமுறைகளை கடை பிடிக்க இங்கு போதிய இட வசதி இல்லை. இதனால் நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆடி மாதம் முழுதும் கோவில் மூடப்படுவதாக கோவில் பரம்பரை அறங்காவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Keywords

Gingee ,Tamil Nadu ,India ,Karnataka ,Villupuram , ,Temple Execution ,Andhra Pradesh ,Villupuram District Admin ,Pongal Place ,Trustee Ravichandran ,கிங்கீ ,தமிழ் நாடு ,இந்தியா ,கர்நாடகா ,வில்லுபுரம் ,ஆந்திரா பிரதேஷ் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.