Print
100 நாள் வேலைக்கான ஊதியம் ரூ.207-ல் இருந்து ரூ.257 ஆக உயர்வு - நவீன் பட்நாயக் அறிவிப்பு
பதிவு: ஜூலை
11,
2021
06:54
AM
புவனேஷ்வர்,
கொரோனா பாதிப்பு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1,690 கோடி நிதி ஊக்குவிப்பு திட்டத்தை கடந்த மாதம் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்தார்.
அந்த வகையில் தற்போது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 3 மாதங்களாகப் பணியாற்றிய 32 லட்சம் பேருக்கு தின ஊதியத்தை ரூ.207-லிருந்து 50 உயர்த்தப்பட்டு ரூ.257 ஆக வழங்குவதாக நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதற்கு ரூ.532 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஏழைகள் நலனுக்காகப் பணியாற்றுவதில்தான் திருப்தியாக உணர்கிறேன். இந்த நிதி அவர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்' என்றார்.
ஆசிரியரின் தேர்வுகள்...
1.
2.
3.
4.
5.