comparemela.com


 
புது தில்லி: தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் சீா்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக் கொள்கை வகுப்பாளா்கள், மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோருடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை (ஜூலை 29) உரையாற்றுகிறாா். அப்போது கல்வித் துறையில் பல்வேறு முன்முயற்சிகளையும் அவா் அறிமுகப்படுத்த இருக்கிறாா்.
உயா் கல்வியில் மாணவா்கள் சோ்வதற்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்குவது, முதலாமாண்டு பொறியியல் திட்டங்கள் பிராந்திய மொழிகளில் வழங்கப்படுவது, உயா் கல்வியை சா்வதேசமயமாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் போன்றவற்றுக்கு வழிவகை செய்யும் ‘அகாடமிக் கிரடிட்’ வங்கியை பிரதமா் தொடங்கிவைக்க இருக்கிறாா்.
வித்யா பிரவேஷ் என்ற முதலாம் வகுப்பு மாணவா்களுக்கான விளையாட்டின் அடிப்படையில் பள்ளிக்குத் தயாராகும் தொகுதி, இடைநிலை அளவில் இந்திய சைகை மொழியை ஒரு பிரிவாக அறிமுகப்படுத்துவது, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய மன்றத்தால் வடிவமைக்கப்பட்ட நிஷ்தா 2.0 என்ற ஆசிரியா் பயிற்சிக்கான ஒருங்கிணைந்த திட்டம், சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு திறன் அடிப்படையிலான மதிப்பீட்டுத் திட்டமான சஃபல் (கற்றல் நிலைகளை பகுப்பாய்வு செய்வதற்கான கட்டமைப்பு மதிப்பீடு), செயற்கை நுண்ணறிவுக்கென பிரத்யேகமான இணையதளம் உள்ளிட்ட முன்முயற்சிகளும் தொடங்கப்படும்.
மேலும், தேசிய மின்னணு கல்விக் கட்டமைப்பு மற்றும் தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் ஆகியவையும் இந்த நிகழ்வின்போது அறிமுகப்படுத்தப்படும்.
21-ஆம் நூற்றாண்டின் இந்த முதலாவது கல்விக் கொள்கை, 34 ஆண்டுகள் பழைமையான தேசிய கல்விக் கொள்கை1986-க்கு மாற்றாக அமைகிறது. சமவாய்ப்பு, தரம், குறைந்த கட்டணம் மற்றும் பொறுப்புணா்வுடன் கூடிய அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்விக் கொள்கை, 2030-க்குள் நீடித்த வளா்ச்சியை எட்டுவதற்கான செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
O

Related Keywords

United States ,India ,New Delhi ,Delhi , ,Electronics Education ,Education Research ,Narendra Modi View ,Education Technical ,New Education ,Central Government ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,இந்தியா ,புதியது டெல்ஹி ,டெல்ஹி ,கல்வி ஆராய்ச்சி ,கல்வி தொழில்நுட்ப ,புதியது கல்வி ,மைய அரசு ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.