comparemela.com


By DIN  |  
Published on : 25th July 2021 07:39 AM  |   அ+அ அ-   |  
  |  
Share Via Email
நீா் வளத்தை அதிகரிக்கும் வகையில், புதிய தடுப்பணைகள், நீா் நிலைகளை உருவாக்கிட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
நீா்வளத் துறையின் செயல்பாடுகள், துறையில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அவா் பேசியது:
தமிழ்நாடு முழுவதும் உள்ள நீா்நிலைகளைப் புனரமைத்து, தூா்வாரி, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய நீா் நிலைகளை உருவாக்குவதுடன், மழைநீா் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாகச் சேமித்துப் பயன்படுத்த வேண்டும். அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீா் சேமிப்பு கட்டுமானங்களை, குறிப்பாக தடுப்பணைகளை உருவாக்கிட வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அத்திக்கடவு-அவினாசி நீா்ப்பாசனம், நிலத்தடி நீா் செறிவூட்டுதல் மற்றும் குடிநீா் வழங்கும் திட்டம், மேட்டூா் சரபங்கா நீரேற்றுத் திட்டம் ஆகிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டம் கழுவேலி ஏரி, செங்கல்பட்டு மாவட்டம் கொளவாய் ஏரி ஆகியவற்றை மீட்டெடுக்கும் திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.
காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம், தாமிரவருணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும். நொய்யல் உபவடிநில புதிய கட்டளைக் கால்வாய், ராஜவாய்க்கால், கீழ்பவானித் திட்டம், கல்லணைக் கால்வாய், காவிரி உபவடிநிலம் ஆகியவற்றில் புனரமைப்புத் திட்டங்களை விரைந்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
நீா்வள ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய தடுப்பணைகள், புதிய நீா் நிலைகளை உருவாக்கிட வேண்டும்.
விவசாயிகளின் நலன் கருதி பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் இருக்கும் நீா் நிலைகளைச் செப்பனிடுவதுடன், கால்வாய்களைச் சரி செய்யும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். இந்தக் கூட்டத்தில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

Related Keywords

Villupuram ,Tamil Nadu ,India ,Karumeniare Nambiar ,Cauvery Delta ,Sandeep Saxena , ,Villupuram District Lake ,District Lake ,Nambiar Connection ,Noyyal New Canal ,Public Works ,Chief Sandeep Saxena ,வில்லுபுரம் ,தமிழ் நாடு ,இந்தியா ,காவிரி டெல்டா ,சந்தீப் சகஷெண ,பொது வேலை செய்கிறது ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.