Netrikann Trailer: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் (Nayanthara) அனைத்து படங்களுக்கும் அவருடைய ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருப்பது இயல்பான விஷயம். அதிலும், நெற்றிக்கண் திரைப்படம் சமீப காலங்களில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படமாகும்.
மிலிந்த் ராவ் இயக்கியுள்ள நெற்றிக்கண் (Netrikann) படம், 2011 ஆண்டு வெளிவந்த கொரிய மொழி படமான ப்ளைண்ட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். கண் பார்வை இல்லாத ஒரு பெண், தன்னுடைய மற்ற திறன்களைப் பயன்படுத்தி ஒரு சீரியல் கொலையாளியைக் கண்டுபிடிப்பதே இப்படத்தின் கதைக்களமாகும். இந்த படத்தில் அஜ்மல் அமீர், சரண், இந்துஜா மற்றும் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் கிராஸ் பிக்சர்ஸ் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.
அவள் புகழ் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் கையாள்கிறார். இந்த படத்தின் டீஸர் நயன்தாராவின் (Nayanthara) பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. இன்று மதியம் 12.15 மணிக்கு நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து. அதன்படி தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
Here comes the deep #NetrikannTrailer!
முன்னதாக நெற்றிக்கண் திரைப்படம், ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பையும் அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தகது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!