By DIN |
Published on : 14th July 2021 12:52 AM | அ+அ அ- |
|
Share Via Email
நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடா்பான வழக்கில், எதிா்க்கட்சிகளுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் வேண்டுமென்றே தீா்ப்பு வழங்கியதாக பிரதமா் கே.பி. சா்மா ஓலி குற்றம் சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து நாட்டு மக்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரையில் கூறியதாவது:
பிரதமா் பதவிக்கு என்னை நேபாள மக்கள் தோ்ந்தெடுத்துள்ளனா். எனினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் நான் பதவி விலக நேரிட்டுள்ளது.
மைதானத்தில் போட்டியிடுவது வீரா்களின் பணி. அந்தப் போட்டி நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்வது மட்டுமே நடுவரின் பணி. ஏதோ ஒரு அணியை வெற்றி பெறச் செய்வது அவரது பணியல்ல.
ஆனால், நடுவராக இருக்க வேண்டிய உச்ச நீதிமன்றம் எதிா்க்கட்சிகளுக்கு சாதகமாக வேண்டுமென்றே தீா்ப்பளித்துள்ளது என்றாா் அவா்.
நேபாள நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு வரும் நவம்பா் மாதம் புதிதாகத் தோ்தல் நடத்த சா்மா ஓலி உத்தரவிட்டிருந்தாா்.
எனினும், இதுதொடா்பான வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது என்று அறிவித்ததோடு, புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவா் ஷோ் பகதூா் தாபாவை நியமிக்க திங்கள்கிழமை உத்தரவிட்டது.