NEET Exam: கொரோனா வைரஸ் (Coronavirus) காரணமாக இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்து உள்ளார்.
ஏற்கெனவே 155 நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 198 நகரங்களில் நீட்தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார். நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணிமுதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
நீட் 2021 க்கு யார் விண்ணப்பிக்கலாம்?
நீட் தேர்வு விண்ணப்பிக்க மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய என்.டி.ஏ (NTA) நிர்ணயித்த நீட் 2021 தகுதி வழிகாட்டுதல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
1. இந்திய நாட்டினர், குடியுரிமை பெறாத இந்தியர்கள் (என்.ஆர்.ஐ), இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்கள் (ஓ.சி.ஐ), இந்திய வம்சாவளியைக் கொண்ட நபர்கள் (பி.ஐ.ஓ), மற்றும் வெளிநாட்டினர் ஆகியோர் NEET 2021-க்கு பதிவு செய்யலாம்.
2. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10+2 தேர்ச்சி பெற்ற அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் / பயோடெக்னாலஜி மற்றும் ஆங்கில போன்ற முக்கிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள்.
3. 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நீட் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
4. 2021 டிசம்பர் 31 ஆம் தேதி அடிப்படையில் குறைந்தபட்சம் 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.