Print
மத்திய அரசு அனைத்து அனுமதிகளையும் வழங்கியுள்ளதால் மேகதாது திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பதிவு: ஜூலை
08,
2021
07:05
AM
பெங்களூரு,
மத்திய அரசு அனைத்து அனுமதிகளையும் வழங்கியுள்ளதால் மேகதாது திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
தமிழக முதல்-அமைச்சரின் ஒத்துழைப்பை பெற கர்நாடக அரசு முயற்சி செய்தது. கர்நாடகத்தின் பங்கு தண்ணீரை மட்டுமே நாங்கள் பயன்படுத்தி கொள்கிறோம். தமிழ்நாட்டிற்ககான ஒதுக்கீட்டு நீரை நாங்கள் எக்காரணம் கொண்டும் பயன்படுத்த மாட்டோம் என அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.
இதனிடையே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில், இந்த வார இறுதிக்குள் சட்ட நிபுணர்களுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்த, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.மேகதாது அணை கட்டுவதற்கான தீவிர முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. எந்த காரணத்துக்கும் திட்டத்தை நிறுத்த முடியாது என்றும், கட்டியே தீருவோம் என்று அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா கூறி வருகிறார்.
இது குறித்து, கர்நாடக சட்டம் மற்றும் உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை, பெங்களூரில் நேற்று கூறியதாவது:கர்நாடகாவை பொறுத்தவரையில், மேகதாது அணை மிகவும் முக்கியமானது. உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது.திட்டம் நிறைவேற்ற எந்தெந்த துறைகளிடம் ஒப்புதல் பெற வேண்டும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது என்ன, என்பது குறித்து, இந்த வாரத்துக்குள், முதல்வர் எடியூரப்பா தலைமையில் சட்ட நிபுணர்களுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தப்படவுள்ளது.காவிரி நதி நீர் நிர்வகிப்பில், மேகதாது அணை முக்கிய பங்கு வகிக்கும். தண்ணீர் பற்றாகுறை காலத்திலும், தமிழகத்துக்கு தண்ணீர் விட உதவியாகும் இருக்கும் என்பதால், இரு மாநிலங்களுக்கும் முக்கியமாகும். அணை கட்டுவதற்கான ஒப்புதல் விரைவில் பெறுவதற்கு முயற்சிக்கப்படும் என்றார்.
தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த ஒரு இடத்திலோ அணைக்கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதோடு, அதை தடுத்து நிறுத்துவதற்கு சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியரின் தேர்வுகள்...
1.
2.
3.
4.
5.