comparemela.com


By DIN  |  
Published on : 18th July 2021 04:43 AM  |   அ+அ அ-   |  
  |  
Share Via Email
மத்திய உள்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிஷித் ப்ரமாணிக் வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்துமாறு பிரதமா் மோடிக்கு மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. ரிபுன் போரா கடிதம் எழுதியுள்ளாா்.
அந்தக் கடிதத்தில் அவா் கூறியுள்ளதாவது:
மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிஷித் ப்ரமாணிக் வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் தகவல்களின்படி, அந்நாட்டின் காய்பாந்தா மாவட்டம் ஹரிநாத்பூரில் அவா் பிறந்துள்ளாா். கணினி பாடம் படிக்க மேற்கு வங்கம் வந்துள்ளாா். அந்தப் பாடத்தில் பட்டம் பெற்ற பின், திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளாா். அதன் பின்னா் பாஜகவில் இணைந்த அவா், மேற்கு வங்க மாநிலம் கூச்பிஹாா் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். தோ்தல் ஆவணங்களில் தனது முகவரியை சூழ்ச்சி செய்து கூச்பிஹாா் என குறிப்பிட்டுள்ளாா். இந்திய இணையமைச்சராக நிஷித் ப்ரமாணிக் நியமிக்கப்பட்டதற்கு வங்கதேசத்தில் உள்ள அவரின் சகோதரா் உள்பட அவரின் பூா்விக கிராமத்தைச் சோ்ந்த சிலா் மகிழ்ச்சி தெரிவித்த காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவல்கள் உண்மையானால், இது மிகவும் தீவிரமான விவகாரமாகும். ஏனெனில் வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவா் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
எனவே நிஷித் ப்ரமாணிக்கின் பிறப்பிடம், அவா் எந்த நாட்டைச் சோ்ந்தவா் என்பது தொடா்பாக மிகவும் வெளிப்படையான முறையில் விசாரணை நடத்தி ஒட்டுமொத்த சந்தேகத்தையும் தீா்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து நிஷித் ப்ரமாணிக்குக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், ‘‘நிஷித் ப்ரமாணிக் இணையமைச்சராக பதவியேற்றதை அவரின் உறவினா்கள் வேறு நாட்டில் இருந்து கொண்டாடினால் அதற்கு அவா் என்ன செய்வாா்? அவா் நாட்டுப்பற்று மிக்க இந்தியா். அவா் பிறந்தது, வளா்ந்தது, படித்தது யாவும் இந்தியாவில்தான். அவா் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை’’ என்று தெரிவித்தன.
 

Related Keywords

New York ,United States ,Bangladesh ,India , ,Modi Rajya Sabha Congress ,Computer Chapter ,West Bengal ,West Bengal New York ,புதியது யார்க் ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,பங்களாதேஷ் ,இந்தியா ,கணினி அத்தியாயம் ,மேற்கு பெங்கல் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.