comparemela.com


By DIN  |  
Published on : 16th July 2021 10:59 AM  |   அ+அ அ-   |  
  |  
 
இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா தினசரி பாதிப்பு 40,000-க்கு கீழ் குறைந்திருந்த நிலையில், இரு தினங்களாக கரோனா பாதிப்பு 41,806-ஆக அதிகரித்தது. இது கரோனா பரவல் தொடா்பான அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 38,949  பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 542 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
கரோனா இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், கரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று சுகாதார வல்லுநா்கள் கூறியுள்ளனா்.
பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனா். அதே நேரத்தில் சந்தைகள், கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல் பலா் செயல்படுவதும் அதிகரித்து வருகிறது. 
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில்  38,949 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,10,26,829-ஆக உயா்ந்துள்ளது. 
40,026 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,01,83,876 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,30,422-ஆக உள்ளது. இது மொத்த கரோனா பாதிப்பில் 1.39 சதவீதமாகும். தேசிய அளவில் குணமடைவோா் விகிதம் 97.28% ஆக அதிகரித்துள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 542 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,12,531-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 39,53,43,767 கோடியாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வியாழக்கிழமை மட்டும் 38,78,078 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 
இந்தியாவில் இதுவரை மொத்தம் 44,00,23,239 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வியாழக்கிழமை மட்டும் 19,55,910 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

Related Keywords

United States ,India , ,Central Department Of Health ,Central Department ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,இந்தியா ,மைய துறை ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.