Print
3 வது அலையை தவிர்க்க கொரோனா தடுப்பூசி போடவேண்டியதிற்கும் போடப்பட்டதற்கும் உள்ள இடைவெளியை நினைவில் வைத்து கொள்ளுங்கள் என ராகுல்காந்தி டுவிட் செய்து உள்ளார்.
பதிவு: ஜூலை
03,
2021
11:23
AM
புதுடெல்லி
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது 34 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனினும் சில மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருந்து வருவதாக கூறப்படுகிறது. தடுப்பூசி பற்றாக்குறை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
ராகுல் காந்தி நேற்று தடுப்பூசி விவகாரம் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து இருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில் ‘‘ஜூலை வந்து விட்டது, தடுப்பூசி வரவில்லை. எங்கே தடுப்பூசி’’ என்று கேட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன்வெளியிட்ட பதிவில்
ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி தகவல்கள் குறித்து நான் ஏற்கெனவே தகவல்களை வெளியிட்டு இருந்தேன். ராகுல் காந்திக்கு என்ன தான் பிரச்சினை?
அவர் அந்த தரவுகளை பார்க்கவில்லையா? ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது. காங்கிரஸ் கட்சி தங்கள் தலைமையை மாற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் ராகுல்காந்தி இன்று ஒரு ஒட்டுமொத்த தடுப்பூசி டிராக்கர் என்னும் வரைபடத்தை வெளியிட்டு உள்ளார். அதில் கொரோனா 3வது அலையை தவிர்க்க கொரோனா தடுப்பூசி ஓவ்வொரு நாளும் 69 லட்சம் போடவேண்டும் எனவும் ஆனால் தற்போது 50.8 லட்சம் தடுப்பூசிகளே போடப்பட்டு வருகிறது. இதற்கான இடைவெளி 27 சதவீதம் உள்ளது. இதனை சுட்டிக்காட்டி இடைவெளியை நினைவில் வைத்து கொள்ளுங்கள் என டுவிட் செய்து உள்ளார்.
Related Tags :