comparemela.com


Advertisement
காவிரி நீர் பிரச்னையில் மத்திய அரசு பாராமுகமாக இருந்ததால், முதல்வராக இருந்த ஜெ., நீதிமன்றத்திற்கு சென்று, தமிழகத்திற்கு நீதியை பெற்றுத் தந்தார்.- அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி'தமிழகத்திற்கு அவர் பெற்றுத் தந்த நீதி, இன்னமும் நிலைநாட்டப்படாமல் இருப்பதால் தான், அவ்வப்போது தொல்லை தொடர்கிறதா...' என, கேட்கத் தோன்றும் வகையில் அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர்
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
காவிரி நீர் பிரச்னையில் மத்திய அரசு பாராமுகமாக இருந்ததால், முதல்வராக இருந்த ஜெ., நீதிமன்றத்திற்கு சென்று, தமிழகத்திற்கு நீதியை பெற்றுத் தந்தார்.
- அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி
'தமிழகத்திற்கு அவர் பெற்றுத் தந்த நீதி, இன்னமும் நிலைநாட்டப்படாமல் இருப்பதால் தான், அவ்வப்போது தொல்லை தொடர்கிறதா...' என, கேட்கத் தோன்றும் வகையில் அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி பேட்டி
மக்கள் தொகை அடிப்படையில், தமிழகத்திற்கு முதல்வர் தடுப்பூசிகளை பெற வேண்டும் என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., கூறுகிறார். மக்கள்தொகை அடிப்படையில், பிரதமர் தடுப்பூசிகள் தர வேண்டும் என்று சொல்ல மாட்டார். அவரிடம் அவ்வளவு பயம் இப்போதும்.
- மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்
'இதெல்லாம் பயமா... மார்க்சிஸ்ட்களுக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே எப்படி உறவு இருக்கிறதோ, அதுபோன்றது தான், ஓ.பி.எஸ்.,சுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே உள்ள உறவு...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை
விநாயகர் சிலை ஊர்வலத்தை இந்த ஆண்டு சிறப்பாக நடத்த, அரசு அனுமதி அளிக்க வேண்டும். இந்த ஆண்டும், விநாயகர் சிலை ஊர்வலத்தை ஹிந்து ஒற்றுமை திருவிழாவாக நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
- ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்
'பிற ஆண்டுகள் எப்படியோ, இந்த ஆண்டு நீங்கள் விரும்புவதை தமிழக அரசு செய்யாது என்றே நம்பலாம். ஏனெனில், அந்த அளவுக்கு ஹிந்துக்கள் மீது நல்லெண்ணம் கொண்டது இந்த அரசு...' என, சொல்லத் தோன்றும் வகையில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி
பார்லிமென்ட் கூட்டத் தொடருக்கான ஆலோசனைக் கூட்டம், 2 மணி 40 நிமிடங்கள் நடந்தது. இதில் பிரதமர் மோடி 9 நிமிடங்கள் பங்கேற்றார். உறுப்பினர்கள் பேசுவதை 3 நிமிடங்கள் கேட்டார். புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு 2 நிமிடங்கள் ஆனது. பிரதமர் பேசியதோ 4 நிமிடங்கள் மட்டுமே.
- தமிழக காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா
'கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என, அந்த, 4 நிமிடங்கள் கேட்டுக் கொண்டார். ஆனால், நடந்தது என்ன... அதனால் தான், இதுபோன்ற கூட்டங்களில் அவர் நீண்ட நேரம் இருப்பதில்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா அறிக்கை
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அ.தி.மு.க.,வினர் மீது, தி.மு.க.,வினர் பொய் வழக்குகளை தொடர்ந்து வருகின்றனர். பத்தாண்டு ஆட்சியில் நாம் அவ்வாறு போட்டதில்லை. எனினும், அ.தி.மு.க.,வினரை கட்சி காப்பாற்றும். கவலைப்பட வேண்டாம்.
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி
'இப்படி எல்லாம் சொன்னால் தான், கட்சியினர் உற்சாகமாக இருப்பர் என்பதை தெரிந்து வைத்துள்ளீர்களே...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

Brazil ,Tamil Nadu ,India ,Arjun Sampath , ,Brazil Central Government ,Report Ganesha ,March Hindu ,Advisory Meeting ,Gopanna Report ,பிரேசில் ,தமிழ் நாடு ,இந்தியா ,அர்ஜுன் சம்பத் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.