comparemela.com


 
Advertisement
கோவை : 'கொங்கு நாட்டு முதல்வரே' என, கொ.ம.தே.க., கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரனுக்கு பட்டம் சூட்டி, கோவை மாவட்டத்தில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தில், 10 லோக்சபா தொகுதிகள், 61 சட்டசபை தொகுதிகள் அடங்குகின்றன. அருகாமையில் உள்ள சில தொகுதிகளை சேர்த்து, 90 சட்டசபை தொகுதிகளுடன் 'கொங்கு நாடு' தோற்றுவித்து, தனி யூனியன் பிரதேசமாக
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
கோவை : 'கொங்கு நாட்டு முதல்வரே' என, கொ.ம.தே.க., கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரனுக்கு பட்டம் சூட்டி, கோவை மாவட்டத்தில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தில், 10 லோக்சபா தொகுதிகள், 61 சட்டசபை தொகுதிகள் அடங்குகின்றன. அருகாமையில் உள்ள சில தொகுதிகளை சேர்த்து, 90 சட்டசபை தொகுதிகளுடன் 'கொங்கு நாடு' தோற்றுவித்து, தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ள தகவல், சில நாட்களுக்கு முன் பரவியது. ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்தாலும், கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களில் சிலர் நேரடியாகவும், சிலர் மறைமுகமாகவும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பா.ஜ., கூட்டங்களில், 'கொங்குநாடு' உருவாக்க ஆதரவு தெரிவித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. தி.மு.க., கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அங்கம் வகிக்கிறது. இதன் பொது செயலாளரும், 'உதயசூரியன்' சின்னத்தில், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஈஸ்வரனுக்கு, 'கொங்குநாட்டு முதல்வரே' என, அக்கட்சியினர் பட்டம் சூட்டி, கோவை மாவட்டத்தில் சுவர் விளம்பரம் எழுதியுள்ளனர்.
சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையை போற்றும் வகையில், சங்ககிரி ஓடாநிலையில் நடக்க உள்ள நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு, சுவர் விளம்பரம் எழுதப்படுகிறது. கோவை மதுக்கரை ஒன்றியம், சீரபாளையம் அருகே போடிபாளையம் கிளை சார்பில், 'கொங்குநாட்டு முதல்வரே' என, ஈஸ்வரனுக்கு பட்டம் சூட்டியுள்ளனர்.
சமீபத்தில், தமிழக சட்டசபை கூட்டத்தில், கவர்னர் உரையில், 'ஜெய்ஹிந்த்' என்கிற சொல் தவிர்க்கப்பட்டத்தை, ஈஸ்வரன் சுட்டிக்காட்டி, சர்ச்சையை ஏற்படுத்தினார். இப்போது, 'கொங்குநாடு முதல்வர்' கோஷத்தை, அக்கட்சியினர் துவக்கியுள்ளனர். இது, கூட்டணி கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது.
'தலைமை பார்த்துக் கொள்ளும்'
தி.மு.க., கோவை புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதியிடம் கேட்டபோது, ''கொ.ம.தே.க.,வினர் செய்துள்ள சுவர் விளம்பரம் தொடர்பாக, கட்சி தலைமைக்கு தகவல் தெரிவிப்போம். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்,'' என்றார்.
மதுக்கரை ஒன்றிய கொ.ம.தே.க., செயலாளர் பாலுவிடம் கேட்ட போது, ''13 ஆண்டுகளாக, பல்வேறு அடைமொழி கொடுத்து, சுவர் விளம்பரம் எழுதுகிறோம்; பிளக்ஸ் பேனர் வைக்கிறோம்; போஸ்டர் ஒட்டுகிறோம். அந்தந்த பகுதி நிர்வாகிகள் விருப்பத்துக்கேற்ப எழுதுவர். 'கொங்குநாடு' பற்றிய பிரச்னையில், கட்சி பொது செயலாளர் கருத்தே, எங்கள் கருத்து,'' என்றார்.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

Spain ,Spanish , ,Kongu Spanish ,ஸ்பெயின் ,ஸ்பானிஷ் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.