comparemela.com


 
Advertisement
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன், தேர்தல் தோல்விக்குப் பின், தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.தனிப்பட்ட முறையில் மகேந்திரனுக்கு கோவை மாவட்டத்தில் செல்வாக்கு உண்டு. தி.மு.க.,வில்இணைந்த போது, 'எனக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பது, முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியும்' என மகேந்திரன் கூறினார். அவரை வரவேற்று பேசிய ஸ்டாலின்,
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன், தேர்தல் தோல்விக்குப் பின், தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.
தனிப்பட்ட முறையில் மகேந்திரனுக்கு கோவை மாவட்டத்தில் செல்வாக்கு உண்டு. தி.மு.க.,வில்இணைந்த போது, 'எனக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பது, முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியும்' என மகேந்திரன் கூறினார். அவரை வரவேற்று பேசிய ஸ்டாலின், 'சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தி.மு.க., வெற்றி பெற்றிருந்தாலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சில மாவட்டங்களில், நாம் வெற்றி பெற முடியாததை எண்ணி வருத்தப்படுகிறேன். மகேந்திரன் அப்போதே வந்து சேர்ந்திருந்தால் அந்த கவலையும், இப்போது இல்லாமல் போயிருக்கும்' என்றார். இது, கட்சியினரிடம் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் தலைமைக்கு எதிராக பொங்குகின்றனர். அவர்கள் கூறியதாவது:கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்தி. அவர் தான் சிங்காநல்லுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர். அவர் தோற்க வேண்டும் என்பதற்காகவே மகேந்திரன் பல வேலைகளை தேர்தல் நேரத்தில் பார்த்தார். அவர் பெற்ற ஓட்டுகளால் தான், தி.மு.க., இந்த முறை தோல்வி அடைந்தது. தி.மு.க., தோல்வியடைய காரணமாக இருந்தவரை, கட்சிக்குள் கொண்டு வந்து புகழ்வது, கட்சிக்காக உண்மையாக பாடுபட்ட தி.மு.க., தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது.
கார்த்திக் ரொம்பவும் நொந்து போயிருக்கிறார். அதனால் தான், அவர் தன் தொகுதியைச் சேர்ந்த முக்கியமானவர், மாற்று கட்சியில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மகேந்திரன், பண பலம் படைத்த தொழில் அதிபர். அதனாலேயே, மக்கள் நீதி மய்யத்திலும், அவருக்கு வரவேற்பு இருந்தது. அதே பாணியில் தி.மு.க.,விலும் பணியாற்ற வந்திருக்கிறார்.
கட்சித் தலைமை அவரை, கோவை மேயர் வேட்பாளராக நிறுத்த உள்ளதாக தகவல் பரவியுள்ளது. இப்படி மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு தான், கட்சியில் முக்கியத்துவம் என்றால், நாங்கள் காலம் காலமாக கட்சிக்கு உழைத்து என்ன பிரயோஜனம்?தற்போது அமைச்சர்களாக இருக்கும் பலரும் அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள் தான். சொந்த கட்சியினருக்கு தி.மு.க.,வில் மரியாதை இல்லை. இதைத் தான், மகேந்திரனை புகழ்ந்து பேசி, கட்சியினருக்கு சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இவ்வாறு அவர்கள் புலம்பினர்.
- நமது நிருபர் - -
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

East District ,India General ,India , ,File District ,Speaking Stalin ,Kongu Galaxy ,File Mayer ,கிழக்கு மாவட்டம் ,இந்தியா ,கோப்பு மாவட்டம் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.