comparemela.com


மீண்டும் தொடங்கியது லால் சிங் சட்டா படப்பிடிப்பு : விஜய் சேதுபதிக்கு பதிலாக நாகசைதன்யா நடிக்கிறார்
10 ஜூலை, 2021 - 11:08 IST
0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
1994ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் பாரஸ்ட் கம்ப். உலகம் முழுக்க பிரபலமான இந்த படம் பல விருதுகளை அள்ளியதோடு வசூலிலும் சாதனை படைத்தது. உலகின் சிறந்த 10 படங்களின் வரிசையிலும் இடம் பெற்றது.
இந்த படம் லால் சிங் சட்டா என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் ஆமீர்கான் நடிக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். 70 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கொரோனா நெருக்கடியால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.
இந்த படத்தில் இரண்டாவது உலகப்போர் காட்சிகள் இடம் பெறுகிறது. அந்த காட்சிகளில் லால் சிங் சட்டாவின் நண்பனாக சக போர் வீரனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். காட்சிகளை சுவிட்சர்லாந்து நாட்டில் படமாக்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அது முடியாமல் போகவே தற்போது லடாக் பகுதியில் படமாக்குகிறார்கள். குறிப்பிட்ட காலத்தில் படப்பிடிப்பு நடக்காததால் விஜய் சேதுபதி உரிய தேதிகள் இல்லாமல் படத்திலிருந்து விலகி விட்டார்.
தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில் விஜய் சேதுபதி நடித்திருக்க வேண்டிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கிறார். படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நாக சைதன்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் நாக சைதன்யாவும், ஆமீர் கானும் இந்திய ராணுவ வீரர்கள் சீருடையில் இருக்கின்றனர். படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது.
Advertisement
கருத்துகள் (0)
கருத்தைப் பதிவு செய்ய

Related Keywords

Ladakh ,Jammu And Kashmir ,India ,Hollywood ,California ,United States ,Switzerland ,Lal Singh ,Vijay Sethupathi ,Aamir Khan India Army ,Released Hollywood ,Vijay Sethupathi Agreement ,லடாக் ,ஜம்மு மற்றும் காஷ்மீர் ,இந்தியா ,ஹாலிவுட் ,கலிஃபோர்னியா ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,சுவிட்சர்லாந்து ,லால் சிங் ,விஜய் செததுபதி ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.