comparemela.com


Advertisement
'வேளாண்மை துறைக்கென தனி பட்ஜெட் போடப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. விரைவில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வேளாண் பட்ஜெட்டுக்கு முன், விவசாய மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலனுக்கான தேவைகள் என்ன என்பது குறித்து, விவசாய சங்க பிரதிநிதிகளோடு, அரசு கலந்து ஆலோசிக்கும் என, விவசாயிகள் எதிர்பார்த்தனர்.இதற்காக, விவசாய சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பின.
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
'வேளாண்மை துறைக்கென தனி பட்ஜெட் போடப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. விரைவில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வேளாண் பட்ஜெட்டுக்கு முன், விவசாய மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலனுக்கான தேவைகள் என்ன என்பது குறித்து, விவசாய சங்க பிரதிநிதிகளோடு, அரசு கலந்து ஆலோசிக்கும் என, விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
இதற்காக, விவசாய சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பின. இது குறித்து, தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் சங்க மாநில செயலர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன் கூறியதாவது: ஒவ்வொரு மாநிலமும், வேளாண்மை துறைக்கு, தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என, நாடு முழுதும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தான், தமிழக விவசாயிகளும் வலியுறுத்தினர்.
கடிதம்
அதை ஏற்ற தமிழக அரசு, இந்தாண்டு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ய போவதாக அறிவித்திருக்கிறது. இதை விவசாயிகள் வரவேற்கின்றனர். ஆனால், விவசாயிகள் நலனுக்காகவும், வேளாண்மை வளர்ச்சிக்காகவும் போடப்படும் பட்ஜெட்டில், என்னவெல்லாம் இடம்பெற வேண்டும் என்பது குறித்து, விவசாயிகளிடம் அரசு கேட்டிருக்க வேண்டும்; செய்யவில்லை.இதற்காக, பல முறை அரசுக்கும், முதல்வருக்கும் கடிதங்கள் அனுப்பினோம்; பதில் இல்லை.ஏற்கனவே கர்நாடகத்தில், வேளாண்மைக்கு என, தனி பட்ஜெட் சமர்ப்பித்தனர். அதை செய்வதற்கு முன், விவசாயிகளுடன் பேசி, எண்ணங்களை அறிந்து பட்ஜெட் தயாரித்தனர்.
விதை நெல் உற்பத்தி செய்பவர்களுக்கு, ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை, பட்ஜெட் வாயிலாக நிறைவேற்றப்படுமா என்பது தெரியவில்லை. இயற்கை வேளாண் சிறப்புத் தொகுப்பு திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். பயிர் காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு, 50 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதற்கு மேல் வரும் தொகையை, அரசே ஏற்க வேண்டும். இதற்காக, தமிழக அரசு, பயிர் காப்பீட்டு நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில், ஒவ்வொரு கிராமத்திலும், 'கொட்டான்' என்ற, கால்நடை ஊட்டச் சத்துணவு மையங்கள், மாநில அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, தமிழகத்திலும் அமைக்க வேண்டும். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க, அதுதொடர்பான தொழில்நுட்ப படிப்புகளோடு, தமிழகத்தில் இயற்கை வேளாண் பல்கலை அமைக்க வேண்டும். உழவர் சந்தைகளை, ஒவ்வொரு பேரூராட்சியிலும் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, ஏராளமான கோரிக்கைகளை, அரசிடம் தெரிவித்து உள்ளோம்.
அவை, வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என்பது, விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.ஆனால், விவசாயிகளுடன் கலந்து பேசாத சூழலில், அவை பட்ஜெட்டில் இடம்பெறுமா என்பது, சந்தேகம் தான். பார்லிமென்டில் பொது பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், நாட்டின் பல துறைகளை சேர்ந்தவர்களையும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசி, ஒவ்வொரு துறைக்கும் தேவையானவற்றை கேட்கிறார். அப்படி கேட்கப்படும் பல விஷயங்கள், பட்ஜெட்டில் இடம் பெறுகின்றன. கடந்த ஆண்டும், விவசாயத் துறை சார்பாக, விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்தார்.
நன்மைகள்
சந்திப்பின் போது பகிரப்பட்ட விஷயங்களை, பட்ஜெட்டில் பிரதிபலிக்கச் செய்தார். இதனால், விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்தன. தமிழக வேளாண் பட்ஜெட்டுக்கு முன், எப்படியும் விவசாய சங்கப் பிரதிநிதிகளை, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜனாவது அழைத்துப் பேசுவார் என, நினைத்தோம். பட்ஜெட் தாக்கல் செய்ய குறுகிய நாட்களே உள்ளன. இப்போதாவது அழைத்து பேச வேண்டும் அல்லது நாங்கள் அனுப்பியிருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் --
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

United States ,Karnataka ,India ,Chhattisgarh ,Tamil Nadu ,Elise Seetharaman ,Agriculture Department ,Agriculture University ,Agriculture Single ,Tanjore District Cauvery ,State Secretary ,Agriculture Guest ,Parliament General ,Central Finance Secretary Elise Seetharaman ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,கர்நாடகா ,இந்தியா ,சத்தீஸ்கர் ,தமிழ் நாடு ,நிலை செயலாளர் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.