comparemela.com


Advertisement
தடுப்பூசிக்காக மீண்டும் மீண்டும் 'ஒன்றிய' அரசின் கதவை தட்ட வேண்டியுள்ளது என, தி.மு.க.,வின் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். திறந்திருக்கும் மத்திய அரசின் கதவுகளை தட்ட வேண்டிய அவசியமில்லை. இல்லாத, 'ஒன்றிய' அரசின் கதவுகளை தட்டுவதால் எந்த பலனும் இல்லை.- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி'நீங்கள் என்ன சொன்னாலும் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு அவர்கள் அப்படித்
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
தடுப்பூசிக்காக மீண்டும் மீண்டும் 'ஒன்றிய' அரசின் கதவை தட்ட வேண்டியுள்ளது என, தி.மு.க.,வின் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். திறந்திருக்கும் மத்திய அரசின் கதவுகளை தட்ட வேண்டிய அவசியமில்லை. இல்லாத, 'ஒன்றிய' அரசின் கதவுகளை தட்டுவதால் எந்த பலனும் இல்லை.
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
'நீங்கள் என்ன சொன்னாலும் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு அவர்கள் அப்படித் தான் சொல்வர். மத்திய அரசுக்கு ஆதரவாக அவர்களை மாற்ற முடியாது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.
சுகாதாரம், சுற்றுலா, தொழில் உள்ளிட்ட துறைகள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ள நிலையில், அதை சீரமைக்க மத்திய அரசு 6.29 லட்சம் கோடி ரூபாய் நிதி சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. அதன் பலன்கள் உடனடியாக மக்களை சென்றடைய, வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- த.மா.கா., தலைவர் வாசன்
'அறிவித்த உடனே, மத்திய அரசு திட்டங்கள் அமலுக்கு வருகின்றன. அதை இன்னும் வேகப்படுத்த வேண்டும் என்கிறீர்கள். பாராட்டுகள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை.
தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை காப்பாற்ற, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து விட்டார். மாநில அரசுடன் வழக்கமான மாற்றாந்தாய் மனப்பான்மையை கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை மறந்து மாநில அரசுடன் இணைந்து இந்த தொழில்களை காப்பாற்ற வேண்டும்.
- தமிழக காங்., தலைவர் அழகிரி
'மாற்றாந்தாய் மனப்பான்மை என, இல்லாத ஒன்றை கூறி கொம்பு சீவி விடுகிறீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை.
ஏழை மக்களின் உழைப்பை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி தாரைவார்த்து விட்டார். எனவே, அவர் பதவி விலக வேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த தேசமும் திவாலாகி விடும்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
'அவர் பதவி விலகினால், ஆட்சியை யாரிடம் கொடுப்பது... அந்த தலைவரின் பெயரையும் சொல்லி விடுங்களேன்...' என, கூறத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சு.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது. அவற்றை உடனடியாக இப்போதே நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. எனினும், முக்கிய பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணுங்கள் என்று தான் சொல்கிறோம்!
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்
'எத்தனை வாக்குறுதிகளை தி.மு.க., அளித்திருந்தது என, அவ்வப்போது அக்கட்சிக்கு நினைவுபடுத்தி வருகிறீர்களோ என்ற சந்தேகம் எழுகிறது...' என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

Narayanan Tirupati ,Thirumavalavan Office ,He Office Step ,Narayanan Tirupati Report ,Central Government ,Wason Report ,நாராயணன் திருப்பதி ,மைய அரசு ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.