comparemela.com


Advertisement
தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் சாதனங்கள் பெருகிவிட்ட நிலையில், இன்னமும் தண்டோரோ போடக் கூடாது. அதை வலியுறுத்தி உத்தரவிட வேண்டும் என, முதல்வரை நான் கேட்டுள்ளேன். எனினும், இன்னமும் அந்த முறையை சிலர் ஊக்குவிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.- விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார்'தண்டோரா போடுவது, மரத்தடியில் பஞ்சாயத்து கூடுவது, பிராது கொடுப்பது, எச்சிலை நக்க
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் சாதனங்கள் பெருகிவிட்ட நிலையில், இன்னமும் தண்டோரோ போடக் கூடாது. அதை வலியுறுத்தி உத்தரவிட வேண்டும் என, முதல்வரை நான் கேட்டுள்ளேன். எனினும், இன்னமும் அந்த முறையை சிலர் ஊக்குவிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார்
'தண்டோரா போடுவது, மரத்தடியில் பஞ்சாயத்து கூடுவது, பிராது கொடுப்பது, எச்சிலை நக்க தண்டனை கொடுப்பது போன்றவை எல்லாம் நீக்கப்பட வேண்டியவை தான்...' என, சொல்ல தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை.
அ.தி.மு.க.,வுக்கு சசிகலா வர நினைப்பது தவறில்லை; ஆனால், தலைமை பதவிக்கு வர நினைப்பது தான் தவறு. ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற அவர் கட்சிக்கு தலைமையேற்றால், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கும்.
- அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., பழனிசாமி
'உங்கள் கட்சியின் முன்னாள் முதல்வர் ஒருவரே, குற்றவாளி என தண்டிக்கப்பட்டவர் தான் என்கின்றனரே, தி.மு.க.,வினர்...' என, சொல்ல தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., பழனிசாமி பேட்டி.
இப்போது செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிப்புக்கு அனுமதி கேட்கும் தி.மு.க.,வின் முந்தைய ஆட்சியில் தான், கிங்ஸ் இன்ஸ்டிடியூட், குன்னுார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன.
- மாநில பா.ஜ., பொதுச் செயலர் ராகவன்
'அப்போ கொரோனா வரவில்லையே... சும்மா இருந்ததால் மூடி விட்டதோ, முந்தைய ஆட்சி...' என, கேட்க தோன்றும் வகையில், மாநில பா.ஜ., பொதுச் செயலர் ராகவன் பேட்டி.
கோவில்களில் உள்ள புராதன சிற்பங்களை பாதுகாக்க, உலோக திருமேனி பாதுகாப்பு அறைகள் தயார் நிலையில் உள்ளன. அத்தகைய அறைகள் இல்லாத கோவில்களில், 303 கோடி ரூபாய் செலவில் அமைக்கவும் திட்டமுள்ளது.
- தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு
'பாதுகாப்பு அறைக்குள் வைத்து பூட்டவா, கோவில் சிலைகள்... கோவில்களில் பாதுகாப்பாக வைத்து வழிபட வழியை பார்க்கலாமே...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
இ.பி.எஸ்., தலைமையில், அ.தி.மு.க., எதிர்காலத்தில் எழுந்து நிற்க வாய்ப்பே இல்லை. கட்சியை முழுமையாக கைப்பற்றி, அதை அழிவுப்பாதைக்கு கொண்டு வந்துவிட்டார்.
- அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி
'கட்சியை விட்டு உங்களை நீக்கிவிட்ட கோபம் கொப்பளிக்கிறதே...' என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டி.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் மின் வெட்டு வந்து விடும். திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவதுபோல் பிரிக்க முடியாதது தி.மு.க.,வும், மின்வெட்டும் தான்.
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன்
'வெறுமனே கிண்டல் செய்யாமல், எப்படி மின் தடை இல்லா மாநிலமாக மாற்றினீர்கள் என, தி.மு.க., அரசுக்கு சொல்லி கொடுக்கலாம் அல்லவா...' என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

Chengalpattu ,Tamil Nadu ,India ,Ravi Kumar ,Kings Institute ,Ravi Kumar Report ,Secretary Raghavan ,Communion Endowments ,செங்கல்பட்டு ,தமிழ் நாடு ,இந்தியா ,ரவி குமார் ,கிண்ஸ் நிறுவனம் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.