Colors:
பதிவு செய்த நாள்
12
ஜூலை
2021
10:38
காரைக்குடி: கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக கோயில்கள் திறக்கப்பட்டும், கொரோனா அச்சத்தால் வெறிச்சோடிக் கிடந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் கோயில்களில் சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்ததால், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு கடந்த ஜூன் 5-ஆம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக கோயில்கள் பலவும் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. இந்நிலையில், ஞாயிறு விடுமுறை நாளான நேற்று, குன்றக்குடி சண்முகநாத பெருமான்,, காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.