comparemela.com


இந்தியாவில் இன்று புதிய கோவிட் -19 தொற்று பாதிகள் சற்று குறைவாகவே பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 43,509 புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது என்றும், இறப்புகளின் எண்ணிக்கை  640 என்ற அளவில் பதிவாகியுள்ளது எனவும், சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. 
மேலும், குண்மடையும் மொத்த விகிதம் 97.38 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை புதிய தொற்று நோய் பாதிப்புகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 38,465 பேர் COVID -19  தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக, தெரிவித்துள்ளது. நோய் தொற்றின் காரணமாக சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 4,03,840 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் கொரோனா தொற்று பாதிப்புகள் இந்த வாரத்தில் சிறிதளவு அதிகரித்துள்ளன. கேரளாவில் புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளது ஒரு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில், கிட்டத்தட்ட பாதி அளவு பாதிப்பு கேரளா மாநிலத்தில் உள்ளது. 
இதற்கிடையில், கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து புதிய  விசாரணையைத் தொடங்கப்போவதாக WHO அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, சீனா இந்த ஆய்வின் யோசனையை நிராகரித்ததோடு மட்டுமல்லாமல், சில முக்கியமான விவரங்களை அமெரிக்கா மறைத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. 
உலக அதிகாரிகள் ஆய்வகங்களில் விசாரனை செய்ய  விரும்பினால், அமெரிக்காவின் ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகமும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று பெய்ஜிங் கூறுகிறது. WHO விசாரணையின் இரண்டாம் கட்டத்திலிருந்து கவனத்தை திசை திருப்ப இது சீனாவின் மற்றொரு தந்திரம் என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர். 
இதற்கிடையில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் இறப்பு தொடர்பான புதிய தரவுகளை சமர்ப்பிக்குமாறு மாநிலங்களை கோர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஆக்ஸிஜன் இறப்பு தொடர்பான ‘எந்தத் தரவும்’ இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதிலளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Related Keywords

China ,Beijing ,United States ,India ,Kerala , ,Central Government In Parliament ,Twitter ,Facebook ,Kerala New ,Central Government ,சீனா ,பெய்ஜிங் ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,இந்தியா ,கேரள ,ட்விட்டர் ,முகநூல் ,கேரள புதியது ,மைய அரசு ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.