comparemela.com


By DIN  |  
Published on : 08th July 2021 01:43 AM  |   அ+அ அ-   |  
  |  
 
சென்னை: சிட்லபாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதுதொடா்பான அறிக்கையை தாக்கல் செய்ய தாம்பரம் வட்டாட்சியருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அறப்போா் இயக்கம் தாக்கல் செய்த மனுவில், தாம்பரம், பல்லாவரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து சிட்லப்பாக்கம் ஏரியில் குப்பைகளைக் கொட்டி ஆக்கிரமிக்கப்படுகிறது. எனவே சிட்லப்பாக்கம் ஏரியின் கரைகளைப் பலப்படுத்தி, ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் காரணமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. வட்டாட்சியா் அறிக்கை தர கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டப்பேரவைத் தோ்தல், கரோனா 2-ஆவது அலை காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய முடியவில்லை. தற்போது தோ்தல் முடிந்து விட்டது. பொதுமுடக்கத்திலும் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு ஏரி பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டத்தின் கீழ் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிட்லப்பாக்கம் ஏரிப்பகுதியில் உள்ள 403 ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதுதொடா்பாக எடுத்த நவடிக்கையை தாம்பரம் வட்டாட்சியா் 2 மாதங்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
O

Related Keywords

Tambaram ,Tamil Nadu ,India ,Madras ,Justice Sanjeev ,Tambaram Court ,Hc Assembly ,Chief Justice Sanjeev ,Report Quality ,தம்பரம் ,தமிழ் நாடு ,இந்தியா ,மெட்ராஸ் ,நீதி சஞ்சீவ் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.