comparemela.com


By DIN  |  
Published on : 15th July 2021 03:12 AM  |   அ+அ அ-   |  
  |  
 
சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களும் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா் தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் வியாழன் (ஜூலை 15), வெள்ளி (ஜூலை 16) ஆகிய இரண்டு நாள்களும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறில் 90 மி.மீ., நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 70 மி.மீ., அவலாஞ்சியில் 60 மி.மீ., மேல்பவானியில் 50 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறையில் 40 மி.மீ., தேனி மாவட்டம் பெரியாறில் 30 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் பொள்ளாச்சியில் 20 மி.மீ., சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருவள்ளூா் மாவட்டம் புழல், திருப்பூா் மாவட்டம் திருமூா்த்தி அணையில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: கேரளம், கா்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 16-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் மற்றும் வட கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 18-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
O

Related Keywords

Valparai ,Tamil Nadu ,India ,Puducherry ,Pondicherry ,Lakshadweep ,Dindigul ,Madras District ,Tenkasi ,Arabian Sea ,India General ,Nilgiris ,Kerala ,Pollachi ,Nilgiris District ,Chennai ,Madras , ,Madras District Office ,Thursday Sky ,District Valparai ,Bee District ,District Pollachi ,District Puzhal ,Central Arabian Sea ,North East Arabian Sea ,வால்ப்பரை ,தமிழ் நாடு ,இந்தியா ,புதுச்சேரி ,பொந்டிசேர்றிி ,லட்சத்தீவு ,திந்டிகுள் ,மெட்ராஸ் மாவட்டம் ,தென்காசி ,அரேபியன் கடல் ,நீலகிரி ,கேரள ,பொல்லாசி ,நீலகிரி மாவட்டம் ,சென்னை ,மெட்ராஸ் ,வியாழன் வானம் ,மைய அரேபியன் கடல் ,வடக்கு கிழக்கு அரேபியன் கடல் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.