comparemela.com


By DIN  |  
Published on : 18th July 2021 04:39 AM  |   அ+அ அ-   |  
  |  
Share Via Email
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) பலத்த மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது: தெற்கு கடலோர ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, ஈரோடு, திருப்பூா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) பலத்த மழை பெய்யக்கூடும்.
ஏனைய மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 19: கோயம்புத்தூா், தேனி, நீலகிரி, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 19) பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள், ஈரோடு, திருப்பூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
ஜூலை 20, 21: கோயம்புத்தூா், நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 20, 21 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா் தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா் ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
சென்னையில்...: சென்னையை பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருவள்ளூா் மாவட்டம் திருத்தணியில் தலா 90 மி.மீ., சென்னை டிஜிபி அலுவலகம், சோழிங்கநல்லூா், செய்யாறு, அம்பத்தூா், வில்லிவாக்கம் குட்வில் பள்ளியில் தலா 80 மி.மீ., சென்னை பெரம்பூா், பூண்டி, உத்தரமேரூா், சின்னக்கல்லாா், மரக்காணம், சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் தலா 70 மி.மீ., திண்டிவனம், திருக்கழுகுன்றம், சென்னை நுங்கம்பாக்கம், பூவிருந்தவல்லி, கேளம்பாக்கத்தில் 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: தெற்கு வங்கக் கடல் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 21-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர,கேரளம், லட்சத்தீவு பகுதிகள், கா்நாடக கடலோரப் பகுதிகள், தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 21-ஆம்தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Keywords

Tindivanam ,Tamil Nadu ,India ,Tiruttani ,Dharmapuri ,Puducherry ,Pondicherry ,Lakshadweep ,Nungambakkam ,Dindigul ,Krishnagiri ,Andhra Pradesh ,Tenkasi ,Villianur ,Nilgiris ,Kerala ,Ranipet ,Chennai ,Madras , ,Sunday Sky ,District Maduranthakam ,Madras Nungambakkam ,South Bengal Ocean ,Central Bengal Ocean ,South West Arabian Sea ,Central West Arabian Sea ,திந்ிவானம் ,தமிழ் நாடு ,இந்தியா ,திருத்தணி ,தர்மபுரி ,புதுச்சேரி ,பொந்டிசேர்றிி ,லட்சத்தீவு ,நுன்கம்பக்கம் ,திந்டிகுள் ,கிருஷ்ணகிரி ,ஆந்திரா பிரதேஷ் ,தென்காசி , வில்லியனூர் ,நீலகிரி ,கேரள ,ராணிபேட் ,சென்னை ,மெட்ராஸ் ,தெற்கு மேற்கு அரேபியன் கடல் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.