comparemela.com


Print
ஜெய்ர் போல்சனோரா குடலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பதிவு: ஜூலை
17, 
2021
05:36
AM
பிரேசில் நாட்டின் அதிபராக 2019 ஜனவரி 1-ந் தேதி முதல் பதவி வகிப்பவர், ஜெயிர் போல்சொனரோ (வயது 66) ஆவார். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது அவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் இருந்து அவரது உடல்நிலை குறித்து கவலைகள் எழுந்து வந்தன. அப்போது அவரது உடலில் இருந்து 40 சதவீத ரத்தம் வெளியேறியது. அதைத் தொடர்ந்து அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த தொற்றை அவர் கையாளும் விதம் அங்கு பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இதனால் அவருக்கு எதிராக கடுமையான அழுத்தங்கள் ஏற்பட்டு வந்தன.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் கூட தடுப்பூசிகள் கொள்முதலில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறி பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினர். கடந்த மாதம் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்து விட்டது. அதிபர் ஜெயிர் போல்சொனரோவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டார்.
இந்த நிலையில்,  ஜெய்ர் போல்சனோரா குடலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாவ் பாவ்லோ நகரில் உள்ள நோவாஸ்டார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  ஜெய்ர் போல்சோனரா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியரின் தேர்வுகள்...
1.
2.
3.
4.
5.

Related Keywords

Brazil , ,Brazil Chancellor ,பிரேசில் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.