By DIN |
Published on : 29th July 2021 02:19 AM | அ+அ அ- |
|
புது தில்லி: திவால் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் விவாதமின்றி புதன்கிழமை நிறைவேறியது.
மக்களவையில் கடந்த திங்கள்கிழமை இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று பெருநிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சா் இந்திரஜித் சிங், மக்களவையில் புதன்கிழமை கோரிக்கை விடுத்தாா். ஆனால், பெகாஸஸ் உளவு விவகாரம், வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை முன்வைத்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால், விவாதம் எதுவும் நடத்தப்படாமல், திவால் சட்டத் திருத்த மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அந்த நிறுவனங்களுக்கு உதவும் வகையில் திவால் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஏப்ரலில் இயற்றியது.
அதன்படி, எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான குறைந்தபட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக அதிகரிக்கப்பட்டது. அந்த அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் நோக்கில் திவால் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
O